குளிர் பானங்கள் மூலமும் குளிர்ச்சி தரும் உணவு வகைகள் மூலமும் வெயிலில் தாக்கத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்
வித்தையைத் தெரிந்துகொண்டால் கோடை காலத்தைக் குதூகலத்துடன் கழிக்கலாம்.
* எலுமிச்சைச் சாற்றுடன் இரண்டு மடங்கு சர்க்கரையைக் கலந்து ஐஸ் டிரேயில் நிரப்பி ஃப்ரீசரில் வைத்துவிடுங்கள். தேவையான
போது ஒரு டம்ளர் நீரில் ஒன்று அல்லது இரண்டு ஐஸ் கியூப்களைக் கலந்து பருகலாம்.
* குழந்தைகளுக்கு எலுமிச்சை ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ் தரும்போது சிட்டிகை உப்பும் மிளகுத் தூளும் கலந்து கொடுத்தால் சளிப்
பிடிக்காது.
* தயிர் சாதத்தில் கடுகுக்குப் பதில் ஓமத்தைத் தாளித்துச் சேர்த்தால் வாசனையாகவும் இருக்கும். செரிமானத்தையும் அதிகரிக்கும்.
* இரண்டு டீஸ்பூன் ஜாம் எடுத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிதளவு பால் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். பிறகு தேவையான பால் சேர்த்து
நுரை வர அடித்து, சர்க்கரை சேர்த்தால் சுவையான மில் ஷேக் தயார். இதைக் குழந்தைகள் விரும்பி அருந்துவர்.
* கோடையில் அதிகளவில் கிடைக்கும் தர்பூசணியை வாங்கி விதைகளை எடுத்து விட்டு அதனுடன் புதினா, இஞ்சி, தேன், சேர்த்து அரைத்து ஜூஸ் செய்து கொடுக்கலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் வறட்சியை தடுக்கும்.