விடுமுறை என்பது உடலையும், மனதையும் உற்சாகப்படுத்த ஏற்படுத்தப்பட்டது. வாரந்தோறும் வேலை செய்து பணிச்சூழலினால் ஏற்பட்ட மன உளைச்சலில் சிக்கியிருப்பவர்கள் கோடைகால வார விடுமுறையை கொண்டாட திட்டமிடலாம். இதனால் உங்கள் காதல் வாழ்க்கை என்றென்றும் இளமையோடு திகழும் என்கின்றனர் நிபுணர்கள்.
திட்டமிடுங்கள்
உங்களுக்கு உற்சாகம் தரக்கூடிய இடங்கள் எவை என்று முதலில் முடிவு செய்யுங்கள். காதலிற்கு குஷி தருவதாகவும், மனதிற்கு இதம் தருவதாகவும் இருக்கும் பீச் ரிசாட்ஸ் உங்கள் விருப்பம் எனில் முன்கூட்டியே ரிசர்வ் செய்யுங்கள்.
கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்
இடத்தை தேர்வு செய்த பின்னர் தங்கும் அறைகள், உணவு போன்றவைகளை உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ப முடிவு செய்யுங்கள். கணவருக்கு சர்ப்ரைஸ் தருகிறேன் என்ற பெயரில் செலவு இழுத்துவைக்கவேண்டாம். டூர் நாட்கள் குறைந்த நாட்களாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்குமாறு திட்டமிடுங்கள்.
மசாஜ் செய்து கொள்ளுங்கள்
இது காதலை அதிகரிப்பதற்கான டூர் என்பதால் நாட்களை திட்டமிட்ட உடனேயே உங்களை நீங்கள் தயார் படுத்திக்கொள்ளுங்கள். பெடிக்யூர், மெனிக்யூர் செய்து கொள்ளலாம். வேக்ஸ் செய்து உடலில் தேவையற்ற இடங்களில் உள்ள முடிகளை நீக்கி விடலாம். இதனால் உங்கள் மனம் கவர்ந்த கணவரை எளிதாக இம்ப்ரஸ் செய்ய முடியும்
பாதுகாப்பு நடவடிக்கை
நீங்கள் செல்வது ஜாலி ட்ரிப் என்பதால் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை கையில் கொண்டு செல்லுங்கள். காண்டம்ஸ், மருத்துவர்கள் பரிந்துரைத்த கருத்தடை மாத்திரைகள் போன்றவைகளை உங்கள் பைகளில் பத்திரமாக எடுத்து செல்லுங்கள். அப்பொழுதுதான் எந்த வித சங்கடங்களும், பயமும் இன்றி உங்கள் விடுமுறையை ஜாலியாக கொண்டாடமுடியும்.
நீங்களும் உற்சாகமூட்டும் கோடைகால வாரவிடுமுறையை கொண்டாட கிளம்பிட்டீங்களா