Home உறவு-காதல் கெட்ட வார்த்தை பேசும் ஆண்களை வெறுக்கும் பெண்கள்

கெட்ட வார்த்தை பேசும் ஆண்களை வெறுக்கும் பெண்கள்

43

imagesபெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் குணங்களால் தான். இப்போது எந்த மாதிரியான குணங்களைக் கொண்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

அசிங்கமாக பேசும் ஆண்களை பெண்கள் விரும்ப மாட்டார்கள். பெண்களால் இந்த குணம் உள்ள ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை பயன்படுத்துவார்கள். எனவே இத்தகைய கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆண்களுடன் உறவுமுறையைத் தொடர்வதைத் தவிர்ப்பார்கள். பல பெண்களுடன் தொடர்புள்ள ஆண்களுடன் நட்பு கொள்வதையும் வெறுப்பார்கள்.

ஏனெனில் இந்த குணமுள்ள ஆண்கள் வெறும் தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தான் பழகுகிறார்கள் என்ற கருத்து பெண்களின் மனதில் இருப்பதாலேயே. பெண்களுக்கு குடிகாரர்களை பிடிக்காது. அதற்காக சுத்தமாக பிடிக்காது என்று சொல்ல முடியாது. ஆனால் தினமும் குடித்தால், அத்தகையவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ முடியாது என்பதால் தான். சைகோ குணமுள்ள ஆண்களுடன் இருக்கவே வெறுப்பார்கள். ஏனெனில் இத்தகைய குணமுள்ள ஆண்களிடம் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தும் இருக்கும். ஆண்களுள் எவர் மிகவும் சுயநலத்துடன் இருக்கிறார்களோ, அத்தகயைவர்களுக்கு காதல் நிலைக்காது.

ஏனெனில் இத்தகையவர்கள் எப்போதும் தன்னைப் பற்றியே நினைத்தால், எந்த பெண்ணுக்கு தான் பிடிக்கும்? பெண்களுக்கு ரொமான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் காதல் செய்யும் ஆணிடம் ரொமான்ஸ் இல்லாவிட்டால், பின் அதுவே இருவருக்கிடையே சண்டைகளை ஏற்படுத்தி, பிரிவுகளை ஏற்படுத்திவிடும். அத்தகைய ரொமான்ஸானது வற்புறுத்தி வரக்கூடாது.

அவ்வாறு வற்புறுத்தும் வகையிலும், வெறுப்பேற்றும் வகையிலும், எந்நேரமும் செக்ஸ் பற்றியே பேசுவது, அந்த செயல்களிலேயே ஈடுபடுவது என இருந்தால், அது பெண்களுக்கு பெரும் வெறுப்பை ஏற்படுத்திவிடும். ஆண்களுள் எவர் மிகவும் சோம்பேறித்தனத்துடனும், எதிலும் ஒரு ஆர்வமின்றியும் இருக்கின்றார்களோ, அத்தகையவர்களால் பெண்களை சுத்தமாக ஈர்க்க முடியாது.