சிக்கன் – 3/4 கிலோ
கூர்க் மசாலா பவுடர் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – சிறிதளவு
ரெட் ஒயின் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டிஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 5 (தோலுரித்து நறுக்கியது)
இஞ்சி,பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
கூர்க் மசாலா பவுடருக்கு..
மல்லி – 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
கிராம்பு – 4
பட்டை – 1 இன்ஞ் துண்டு
பச்சை ஏலக்காய் – 2
எப்படி செய்வது ?
முதலில் அடுப்பில் கடாயை வைத்து, அதில் கூர்க் மசாலா பவுடருக்கு தேவையான அனைத்து பொருட்களையும் போட்டு வறுத்து, ஒரு தட்டில் போட்டு ஆற வைக்க வேண்டும். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் கூர்க் மசாலா பவுடர், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, ரெட் ஒயின் வினிகர், உப்பு ஆகியவற்றை சேர்த்து 1-2 மணிநேரம் நன்கு ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேக வைக்க வேண்டும். அதே நேரத்தில் மற்றொரு அடுப்பில், கடாயை வைத்து, 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு சிறிது மிளகாய் தூள், கூர் மசாலா பவுடர் சேர்ந்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும். பின் வெந்து கொண்டிருக்கும் சிக்கனை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி, சிக்கன் நன்கு வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, அதில் கொத்தமல்லியை தூவி இறக்கினால், கூர்க் சிக்கன் குழம்பு ரெடி !!