Home பெண்கள் அழகு குறிப்பு கூந்தலை பாதுகாக்கும் தேங்காய் பால்

கூந்தலை பாதுகாக்கும் தேங்காய் பால்

30

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் கூந்தலை பராமரிக்கவும், பாதுகாக்கவும் தேங்காய் எண்ணெயை உபயோகிக்கின்றனர். தேங்காயில் இருந்து கிடைக்கும் எண்ணெயைப் போல தேங்காய் பால் கூந்தலை பாதுகாக்க உதவுகிறது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். கூந்தலுக்கு ஊட்டமளிப்பதோடு உதிராமல் தடுத்து கூந்தலின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தேங்காய் பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. வைட்டமின்கள், தாது உப்புகள், பொட்டாசியம், போலேட் போன்றவை காணப்படுகின்றன.

தேங்காய் பால் ஊட்டச்சத்து

தலைமுடிக்கு ஏற்றவாறு தேங்காயை எடுத்து (ஒரு மூடி) சிறிது வெந்நீர் விட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டி ஒரு கப்பில் எடுத்துக்கொள்ளவும்.

தலையை சுத்தமாக அலசி காயவைத்து பின்னர் தேங்காய் பாலை மெதுவாக வேர்கால்களில் படுமாறு அப்ளை செய்யவேண்டும். தண்ணீர் போல இருப்பதால் பூசிய உடன் நன்கு கவர் போட்டு கூந்தலை கட்டிவிட வேண்டும்.

இரண்டு மணி நேரம் ஊறிய பின்னர் குளிர்ந்த நீரில் தலையை அலச வேண்டும். இதனால் தேங்காய் பாலில் உள்ள இயற்கையான எண்ணெய்கள் தலையில் தங்கிவிடும். இரண்டு நாள் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கலாம்.

கூந்தலை பாதுகாக்கிறது

தேங்காய் பால் தேய்த்து குளிப்பதால் தலையில் இருந்து அதிக அளவில் முடி கொட்டுவது கட்டுப்படும். தலையில் புதிய முடிகள் உருவாகும். நீளமான கூந்தல் கிடைக்கும். மென்மையாகவும், பளபளப்பாகவும் கூந்தல் மாறும்.

வாரம் ஒருமுறை தேங்காய்பாலில் தலை குளிப்பதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இதனால் அழகான, ஆரோக்கியமான கூந்தல் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனவே தேங்காய் பால் கூந்தல் அழகை மட்டுமல்லாது உடல் அழகையும் சீராக பராமரிக்கிறது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.