Home சூடான செய்திகள் கூடுதலாக ஒரு மணி நேரம் தூங்கினா, செக்ஸ் லைஃப் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்…

கூடுதலாக ஒரு மணி நேரம் தூங்கினா, செக்ஸ் லைஃப் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்…

28

615033_originalபெண்களே, உங்களுக்கு செக்ஸ் மீதான ஆர்வம் குறைந்துவிட்டதா? கவலைப்படாதீர்கள். தினமும் கூடுதலாக ஒரு மணி நேரம் தூங்குங்க, அதுபோதும். செக்ஸ் மீதான உங்களுடைய ஆர்வமும் விருப்பமும் தானாகச் சரியாகிவிடும்.

அதாவது, பெண்கள் தாங்கள் தூங்கும் நேரத்தை கூடுதலாக ஒரு மணி நேரம் நீடித்தாலே, அவர்களுடைய செக்ஸ் லைஃப் சுவாரசியமாக இருக்கும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

செக்ஸ் விஷயத்தில் தூக்கம் ஒரு முக்கியமான காரணம் என்று கண்டறியப்பட்டிருந்தாலும், கூடுதலாகத் தூங்குவதால் செக்ஸில் பெண்களுக்கு ஆர்வமும் விருப்பமும் அதிகரிக்கும் என்பது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு என்று மிச்சிகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் காம்பாக் மற்றும் அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சி குறித்த ஒரு ஆய்வறிக்கையை செக்ஸுவல் மெடிசின் என்ற சஞ்சிகையில் அவர்கள் வெளியிட்டுள்ளனர். சுமார் 171 பெண்களிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

சராசரியாக ஒரு பெண் 7 மணி 22 நிமிடம் தூங்குகின்றனர். வழக்கமான நேரத்துக்குத் தூங்கி எழும் பெண்களைவிட, கூடுதலாக ஒரு மணி நேரம் தூங்கும் பெண்களுக்கு செக்ஸில் கூடுதல் ஆர்வமும் ஈடுபாடும் கிட்டத்தட்ட 14 சதவீதம் அதிகமாக இருக்கிறது என்று இந்த ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவை வைத்து, செக்ஸில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதற்கு தூக்கப் பிரச்னைகள் முக்கியக் காரணமாக இருக்குமா என்ற ரீதியில் அடுத்தகட்ட ஆராய்ச்சியை இவர்கள் தொடங்கியுள்ளனர்.