Home பெண்கள் தாய்மை நலம் குழந்தை பிறந்த பிறகு பெண் உடலில் ஏற்படும் ஆறு மாற்றங்கள்!

குழந்தை பிறந்த பிறகு பெண் உடலில் ஏற்படும் ஆறு மாற்றங்கள்!

16

15-1458038216-4sixpost-deliverybodysurprisestoexpectகருத்தரிப்பதில் இருந்து குழந்தை பிறந்த ஆறேழு மாதம் வரை பெண்களின் உடலில் பல மாற்றாங்கள் ஏற்படும். ஹார்மோன் செயல்பாடு மாற்றங்கள், உடல் பாகங்களின் செயற்திறன் மற்றும் குழந்தை பிறக்கும் முன்னர், பிறந்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் என பலவன இருக்கின்றன.
இதில் பெரும்பாலானவை மிக இயல்பானவை மற்றும் இயற்கையாக அனைவருக்கும் ஏற்படுவது தான். ஆனால், அந்தந்த பெண்களின் உடல்கூறு மற்றும் உடற்சக்தியை வைத்து சிலவன சீக்கிரமாக சரியாகிவிடும், சிலருக்கு சரியாக நாட்கள் அதிகரிக்கும். இதுப் போன்ற சமயங்களில் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது நல்லது….
மசாஜ்
குழந்தை பிறந்து தொப்புள் கொடி அறுத்து பிரித்த பிறகு பெண்களின் கருப்பையில் ஒருவிதமான வலி உண்டாகும். இதற்கு மருத்துவர்கள் (அ) மருத்துவச்சி கருப்பை பகுதியில் ஒருவகையான மசாஜ் செய்துவிடுவார்கள். இதை ஆங்கிலத்தில் “Fundal Massage” என கூறுகிறார்கள்.
இவ்வாறு ஃபண்டல் மசாஜ் செய்வது, பிரசவித்த பெண்ணின் வலி குறைய உதவும் என கூறப்படுகிறது. சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை என இரு வகையாக இருப்பினும் இந்த வலி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது அந்தந்த பெண்ணின் உடற்கூறு, உடல் வலிமையை பொருத்தது.
நடுக்கம்
குழந்தை பிறந்த ஒருசில மணிநேரத்தில் இருந்து ஒருநாள் வரை பெண்களுக்கு உடல் நடுக்கம் அல்லது குலுங்குதல் போன்ற உணர்வு இருக்கும். இதற்கு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் தான் காரணம். ஒரு நாளுக்குள் இதுவே தானாக சரியாகிவிடும்.

தையல்
அறுவை சிகிச்சை மட்டுமின்றி, சுகப்பிரசவமாக இருப்பினும் கூட தையல் போட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஏனெனில், பிரசவத்தின் போது பெண்ணுறுப்பு மற்றும் ஆசனவாய் பகுதியில் உண்டாகும் விரிதலால் சில சமயங்களில் காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால், தையல் போட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
இரத்தப் போக்கு
குழந்தை பிறக்கும் போது மட்டுமின்றி, குழந்தை பிறந்த பிறகும் கூட கருப்பையில் இருந்து இரத்தப் போக்கு ஏற்படும். இது இயல்பு தான், தானாக அதுவே சரியாகிவிடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை தொடர்ந்து இரத்தப் போக்கு இருந்தால் மருத்துவரிடம் கூற வேண்டியது அவசியம்.
வீக்கம்
குழந்தை பிறக்கும் போது பெண்களின் உடலில் 50% வரை இரத்த அழுத்தம் அதிகரிக்கும். பிறகு, மெல்ல, மெல்ல இது குறைய ஆரம்பிக்கும். இந்த மாற்றங்களினால் பெண்களின் கால்களில் வீக்கம் ஏற்படும். பத்து நாட்களுக்குள் இது தானாக சரியாகிவிடும்.
சிறுநீர் கழித்தல்
பொதுவாக ஆறேழு மாதத்தில் இருந்தே கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்வர். இது மிகவும் இயல்பு. ஆனால், குழந்தை பிறந்த பிறகும் கூற இது தொடரும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இதற்கு காரணம் பிரசவத்தின் போது சிறுநீர் பாதையில் ஏற்படும் மாற்றம் தான். இதனால், சில சமயங்களில் உணர்வின்றி கூட சிறுநீர் கசிவு ஏற்படலாம். தும்மல், இருமல் வரும்போது கூட சிறுநீர் கசியலாம். இது நீண்ட நாட்கள் தொடர்ந்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.