* முன்பின் தெரியாத, அறிமுகம் இல்லாத நபர்கள் சாக்லேட், பிஸ்கட் கொடுத்தாலும் கூட வாங்கி சாப்பிடக்கூடாது என்று கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் உணவு, பொம்மை என்னதான், ஆசையைத் தூண்டினாலும் சரி… அதை வாங்கக் கூடாது என்று சொல்லித்தர வேண்டும்.
* குழந்தைகள் அதிக அளவில் தீக்காயங்களுக்கு ஆளாகின்றனர். என்னதான் கவனமாக இருந்தாலும், தீயில் கைவிடுவது, சூடான பொருட்களை தொடுவது என்று காயங்கள் ஏற்படுகிறது. தீயின் பாதிப்பு பற்றி சொல்லிக்கொடுத்து, விளக்கு அருகிலோ, அடுப்பங்கரைப் பகுதியிலோ தீயில் கை வைக்கக் கூடாது என்று சொல்லி புரிய வைக்க வேண்டும்.
* எந்த ரகசியத்தையும் பெற்றோரிடம் சொல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்று இல்லை. குறிப்பாக, அண்டைவீட்டார், உறவினர்கள் குழந்தையின் உடலில் தொடக்கூடாத இடங்களைத் தொட்டு விளையாடுகிறார்கள் என்றால் அதுபற்றி பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும்.
* மிகச்சிறிய குழந்தை என்றாலும், அப்பா, அம்மாவின் பெயர், வீடு இருக்கும் பகுதி, தொடர்புகொள்ள வேண்டிய நம்பர் உள்ளிட்டவற்றை சொல்லித் தர வேண்டியது மிக மிக அவசியம்.
* நம் வீட்டின் முன்பகுதிதான் என்றாலும், யாரும் இல்லாத நேரத்தில் நடப்பது, தனிமையில் விளையாடுவது பாதுகாப்பானது இல்லை. எப்போதும் பெற்றோர் கண்காணிப்பில் இருப்பதுதான் பாதுகாப்பு என்று சொல்லித்தர வேண்டும்.
* கூட்டத்தில் எங்கேனும் தொலைந்துவிட்டால், அம்மா – அப்பாவைத் தேடி வேறு எங்கும் செல்ல வேண்டாம். காணாமல் போன அந்த இடத்திலேயே பாதுகாப்பான பகுதியில் நின்றுகொள்ள வேண்டும். அப்போதுதான், பெற்றோர் தேடி வரும்போது எளிதில் கண்டறிய முடியும். அருகில், குழந்தையுடன் பெற்றோர் யாராவது சென்றால், அவர்களிடம் உதவி கேட்கச் சொல்லலாம்.