குழந்தை கருவிலிருக்கும்போதே விரல் சப்ப ஆரம்பித்துவிடும். இது அவர்கள் பிறந்த பின்னும் தொடரும். கட்டைவிரலை சப்புவது அவர்களின் பல்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடு ஆகும்.
குழந்தை பயப்படும்போதோ, பசி வரும்போதோ அல்லது தூக்கம் வரும்போதோ முதலில் விரலைத்தான் சப்பும். சிறு வயதில் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த பழக்கம் இருக்கும். அப்படி செய்யும் போது அவர்களை தடுக்க வேண்டாம். அது அவர்களுக்கு பல்வேறு வகையில் நன்மை பயப்பதாகும்.
விரல் சப்பும் பழக்கம் அவர்களுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்கும். அவர்களை இந்த பழக்கத்தை நிறுத்தச்சொல்லி நீங்கள் கட்டாயப்படுத்தும் போது அவர்கள் அதை அதிகம் செய்ய தொடங்குவார்கள். எந்தவொரு காரியத்தையும் செய்வதற்கு அவர்களைக் கட்டாயப்படுத்துவது அவர்களை சிறு வயதிலியே அதிகம் கோபப்படுபவர்களாக மாற்றிவிடும்.
அவர்களை கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக அவர்கள் வாயில் விரலை வைக்கும் நேரங்களை கண்காணியுங்கள். அவர்கள் வாயில் விரல் வைக்கும்போது அவர்களை வேறு ஏதாவது விஷயங்களைச் சொல்லி, அவர்களின் கவனத்தை திசைதிருப்புங்கள்.
உதாரணமாக, தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்கும்போது விரல் சப்ப முயன்றால் அவர்கள் கையில் ஒரு பந்தை கொடுங்கள் அல்லது அவர்கள் விரல்களை வைத்து செய்யும் வேறு வேலை எதையாவது கொடுங்கள்.
தூங்குவதற்கு முன் விரல் சப்பிக் கொண்டிருந்தால் அவர்களின் கவனத்தை திசைமாற்றி பாட்டு பாடியோ, கதை சொல்லியோ தூங்க வையுங்கள்.
ஆரம்பத்தில் சிறியதாக தொடங்குபுவர்கள் பின்னர் முழுநேரமும் விரல் சப்ப ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களின் விரலை கவனித்துக்கொண்டே இருங்கள். அவர்கள் இந்தப் பழக்கத்தை நிறுத்த முயற்சிப்பதுபோல் உங்களுக்கு தெரிந்தால் 4 வயதுக்கு முன்பாகவே நிறுத்த முயற்சி செய்யுங்கள்.
பற்கள் நிலையாக வளர தொடங்கியபின் விரல் சப்புவது அவர்களின் பல் அமைப்பையே சிதைத்துவிடும்.
அவர்கள் விரல் சப்ப போகிறார்கள் என்று தெரியும்போதெல்லாம் அவர்களை திசைதிருப்புங்கள். அவர்கள் பல் நிலையாக முளைப்பதற்கு முன் இதை நிறுத்தவேண்டும்.