Home குழந்தை நலம் குழந்தைகள் காலை உணவை வெறுக்கிறார்களா?

குழந்தைகள் காலை உணவை வெறுக்கிறார்களா?

25

childrenmorning_food_003காலை உணவை சாப்பிடாத குழந்தைகளுக்கு நீரழிவு நோய் வரும் அபாயம் அதிகரிப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இங்கிலாந்தில் உள்ள சிறுவர் பள்ளிகளில் 10 வயதுக்கு உள்ளிட்ட குழந்தைகளை ஆய்வு செய்ததில் காலை உணவை தவிர்க்கும் குழந்தைகளுக்கு இன்சுலின் சுரப்பின் அளவு மிக குறைந்து இருக்கிறது.

இதன் காரணமாக இரண்டாம் வகை நீரழிவு வருகிறதாம். குழந்தைகளை அதிகம் தாக்குவது முதல் வகை நீரிழிவு நோய். ஆனால், காலை உணவை தவற விடுவதன் மூலம் இரண்டாம் வகை நீரிழிவு வருகிறது.

சிறுவயதிலேயே இந்நோய் வருவதை தடுக்க காலையில் அவசியம் உணவு எடுத்துக் கொள்ளவேண்டும் என இங்கிலாந்தின் நலவாழ்வியல் ஆராய்ச்சி மையம் வலியுறுத்துகிறது.

காலையில் அதிக நார்ச்சத்து உள்ள இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் குழந்தைகளுக்கு வரும் நீரிழிவு நோயும், பருமனும் தவிர்க்கப்படுகிறது.

முறையாக காலை உணவு எடுத்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு, நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் பழக்கம் இயல்பாக குறைந்து, பருமனாதல் தவிர்க்கப்படுகிறது. கொழுப்பு நிறைந்த உணவுகளையும், உடனடி உணவு வகைகளையும் குழந்தைகள் முழுமையாக தவிர்க்க வேண்டும்.

சிறுவயதில் நீரிழிவு நோய் தாக்கும் அபாயத்தைத் தவிர்க்க, குழந்தைகளின் வாழ்க்கை முறையையும் உணவுமுறைகளையும் மருத்துவ ஆலோசனைப்படி மாற்றியமைக்க வேண்டும்.

அதற்கான சிகிச்சையையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அக்கறை காட்டாவிட்டால் பார்வை போதல், சிறுநீரகச் செயலிழப்பு, இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கும் சாதகமாகிவிடும்.

பெற்றோர் குழந்தைகளின் காலை உணவில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒழுங்காக சாப்பிடுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.

நொறுக்குத்தீனிகள் கொடுப்பதையும் தவிர்க்கவேண்டும். தகுந்த கால இடைவெளியில் குழந்தைகளின் ரத்த சர்க்கரையின் அளவைப் பரிசோதித்து கட்டுக்குள் வைத்திருப்பது இன்னும் நல்லது.காலை உணவை சாப்பிடாத குழந்தைகளுக்கு நீரழிவு நோய் வரும் அபாயம் அதிகரிப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இங்கிலாந்தில் உள்ள சிறுவர் பள்ளிகளில் 10 வயதுக்கு உள்ளிட்ட குழந்தைகளை ஆய்வு செய்ததில் காலை உணவை தவிர்க்கும் குழந்தைகளுக்கு இன்சுலின் சுரப்பின் அளவு மிக குறைந்து இருக்கிறது.

இதன் காரணமாக இரண்டாம் வகை நீரழிவு வருகிறதாம். குழந்தைகளை அதிகம் தாக்குவது முதல் வகை நீரிழிவு நோய். ஆனால், காலை உணவை தவற விடுவதன் மூலம் இரண்டாம் வகை நீரிழிவு வருகிறது.

சிறுவயதிலேயே இந்நோய் வருவதை தடுக்க காலையில் அவசியம் உணவு எடுத்துக் கொள்ளவேண்டும் என இங்கிலாந்தின் நலவாழ்வியல் ஆராய்ச்சி மையம் வலியுறுத்துகிறது.

காலையில் அதிக நார்ச்சத்து உள்ள இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் குழந்தைகளுக்கு வரும் நீரிழிவு நோயும், பருமனும் தவிர்க்கப்படுகிறது.

முறையாக காலை உணவு எடுத்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு, நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் பழக்கம் இயல்பாக குறைந்து, பருமனாதல் தவிர்க்கப்படுகிறது. கொழுப்பு நிறைந்த உணவுகளையும், உடனடி உணவு வகைகளையும் குழந்தைகள் முழுமையாக தவிர்க்க வேண்டும்.

சிறுவயதில் நீரிழிவு நோய் தாக்கும் அபாயத்தைத் தவிர்க்க, குழந்தைகளின் வாழ்க்கை முறையையும் உணவுமுறைகளையும் மருத்துவ ஆலோசனைப்படி மாற்றியமைக்க வேண்டும்.

அதற்கான சிகிச்சையையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அக்கறை காட்டாவிட்டால் பார்வை போதல், சிறுநீரகச் செயலிழப்பு, இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கும் சாதகமாகிவிடும்.

பெற்றோர் குழந்தைகளின் காலை உணவில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒழுங்காக சாப்பிடுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.

நொறுக்குத்தீனிகள் கொடுப்பதையும் தவிர்க்கவேண்டும். தகுந்த கால இடைவெளியில் குழந்தைகளின் ரத்த சர்க்கரையின் அளவைப் பரிசோதித்து கட்டுக்குள் வைத்திருப்பது இன்னும் நல்லது.