Home குழந்தை நலம் குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால் செய்ய வேண்டியது

குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால் செய்ய வேண்டியது

42

f4e3b501-2820-4148-a025-144a2d67df75_S_secvpfகுழந்தைகள் இருக்கும் வீடுகளில் சிறிய பொருட்கள் எதையும் குழந்தைகளில் கையில் எட்டும் வகையில் வைக்க கூடாது. ஏனெனில்
குழந்தைகள் விளையாடும் பொழுது சில நேரங்களில் நாணயம், பட்டன், குண்டூசி, பின், ஹுக், நட்டு போன்ற ஏதாவது ஒன்றை வாயில்
போட்டுக் கொள்வார்கள்.
அப்படி எதையாவது உங்கள் குழந்தை விழுங்கிவிட்டால் நீங்கள் முதலில் பதட்டம் காட்ட வேண்டாம்.
குழந்தையை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள். அங்கே ஒரு எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க வேண்டும். பொதுவாக
வழவழப்பான மேல் பகுதி உள்ள எந்த ஒரு பொருளும், நமது குடலின் அசைவினால் மலத்தில் வெளியே வந்துவிடும்.
ஆனால் இது
போன்ற பொருட்கள் வெளியே வர ஒரு வாரம் கூட ஆகலாம். அதனால் குழந்தைகளுக்கு, அதிக சுலபமாக மலம் கழிக்க உதவக்கூடிய
உணவுகளையே வழங்குங்கள். வாழைப்பழம், உலர்ந்த திராட்சை மற்றும் நிறைய தண்ணீர் கொடுக்கவும்.
அவர்களது மலத்தில் அந்த
பொருள் வந்து விட்டதாக என்று தொடர்ந்து பார்க்க வேண்டும்.
ஒரு வேலை வயிற்றுக்குள் சென்ற பொருள் குடலில் அடைத்துக் கொண்டால், வாந்தி மற்றும் மலச்சிக்கல் ஏற்படும். இதற்கு
உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டிய அவசியம்