Home குழந்தை நலம் குழந்தைகள் எங்கு நன்கு தூங்கும் தெரியுமா?

குழந்தைகள் எங்கு நன்கு தூங்கும் தெரியுமா?

19

அனைத்து அம்மாக்களுக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை குழந்தைகள் இரவில் நன்றாக தூங்காமல் இருக்கின்றன என்பதே. அதிலும் பிறந்த குழந்தை என்றால் சொல்லவே வேண்டாம். அந்த குழந்தை தூங்கியப் பின் தான் பெற்றோர்களுக்கு தூக்கமே வரும். மேலும் அவர்கள் அந்த குழந்தை எதற்கு அழுகிறது என்று கூட தெரியாமல் அவர்கள் படும் கவலைக்கு அளவே இருக்காது. ஆகவே அவ்வாறு குழந்தையானது அழுவதற்கு முக்கிய காரணம், அதற்கு சரியான இடமானது இல்லாததாலே ஆகும்.
ஏனெனில் குழந்தை கருவில் இருக்கும் போது தாயின் கருவரைக்குள் ஒரு அரவணைப்போடு இருந்திருக்கும். ஆனால் அந்த குழந்தை உலகைப் பார்த்ததும், அதற்கு ஏற்ற ஒரு நல்ல அரவணைப்பானது இல்லாமல் இருக்கும். ஆகவே குழந்தையானது எங்கு, எப்போது நன்கு தூங்கும் என்று குழந்தை நல மருத்துவர்கள் கூறுகின்றனர் என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…
தாயானவள் குழந்தையுடன் நன்கு நெருங்கி படுத்தால், அந்த குழந்தை தாயுடன் நல்ல ஒரு பழக்கத்தைக் கொள்ளும். ஏனெனில் பிறந்த குழந்தைக்கு மிகவும் முக்கியமானது அரவணைப்பு ஆகும். அதிலும் தாயானவள் நெருங்கிப் படுத்தால், குழந்தை கருவில் இருப்பது போன்று உணரும்.
குழந்தையின் தேவையை எந்த நேரத்திலும் சரி செய்யுமாறு இருக்க வேண்டும். அதற்காக ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை குழந்தையை பார்த்தால் மட்டும் அதன் தேவையை உணர முடியாது. ஆகவே குழந்தை தாயின் பக்கத்தில் இருக்கும் போதே, அந்த குழந்தைக்கு தாளாட்டுப் பாடி பழக வேண்டும். ஏனெனில் குழந்தை தாய் பக்கத்தில் இல்லையென்றால் கூட சில சமயம் அழும். ஆகவே அவ்வாறு அழும் போது தாயானவள் தாளாட்டைப் பாடினால், குழந்தையும் தாய் பக்கத்தில் இருக்கிறாள் என்று அழுகையை நிறுத்தி தூங்கிவிடும்.
குழந்தையை தூங்கும் போது ஏதேனும் ஒடுக்கமான இடத்தில் தூங்க வைக்கலாம். அதுவும் குழந்தை கை மற்றும் கால்களை நீட்டுவதற்கு வசதியாக இருக்க வேண்டும். அதற்கு தொட்டில் தான் சிறந்தது. ஏனெனில் அதில் தான் குழந்தைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கும். மேலும் குழந்தை தவள ஆரம்பித்துவிட்டால், உடனே தொட்டிலில் இருந்து கட்டிலில் போட வேண்டாம். பின் குழந்தைக்கு தான் பாதிப்பு.
வேண்டுமென்றால் தந்தையும் குழந்தையின் பக்கத்தில் தங்கள் கைகளின் இடுக்கங்களில் வைத்து தூங்க வைக்கலாம். அதனால் குழந்தை தந்தையிடமுங்ம நன்கு பழகும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் முக்கியமான ஒன்று, குழந்தை தூங்காமல் பக்கத்தில் இருக்கும் போது, பெற்றோர்கள் எந்த ஒரு சந்தோஷமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம்.
ஆகவே குழந்தை நன்கு தூங்கினால், பெற்றோர்கள் எந்த கவலையும் படாமல், சந்தோஷமாக இருப்பதோடு, குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே மேற்கூறியவாறு செய்தால் குழந்தை நன்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தூங்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.