Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு ஷாம்பு குளியல்

குழந்தைகளுக்கு ஷாம்பு குளியல்

30

குழந்தைகளின் தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கும் பழக்கத்தை இன்று நிறைய தாய்மார்கள் கடைபிடிக்கிறார்கள். தலைமுடிகளை சுத்தமாகவும் நலமாகவும் வைத்திருக்கும் என்று நம்பி நாம் இந்த ஷாம்புகள் பயன்படுத்தும்போது இவைகளில் எவ்வளவு நச்சுத்தன்மை இருக்கிறது என்பதை நாம் கவனிக்க தவறிவிடுகிறோம்.
பொதுவாக ஷாம்புகளில் நிறைய நுரை வருவதற்காக சோடியம் லாரல் சல்பேட் (Sodium Laurel Sulphate) என்ற ரசாயன பொருள் சேர்க்கபடுகிறது. இந்த ரசாயன கலவைதான் தலைமுடிகளில் தண்ணீர் எளிதாக ஊடுருவி செல்ல வழி செய்கிறது. மேலும் தண்ணீரில் வழவழப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் தலைமுடிகளில் உள்ள அழுக்கை நீக்குவது தண்ணீர்தான் தவிர இந்த ரசாயனங்கள் காரணம் கிடையாது.
இந்த ரசாயன கலவை கண்களில் படும்போது எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் தலைமுடி வேர்கள் வழியாக உள்பகுதிகளுக்கு சென்று அரிப்பு ஏற்பட காரணமாக இருக்கிறது.
சமீப காலமாக உலக அளவில் ஷாம்புகளில் இந்த ரசாயன கலவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டதினால் ஷாம்பு தயாரிப்பாளர்கள் புது வழியை கண்டுபிடித்துள்ளனர். சோடியம் லாரல் சல்பேட்க்கு பதிலாக புதிதாக சில ரசாயன கலவைகளை சேர்த்துவிட்டு “சல்பேட் இல்லாத இயற்க்கை ஷாம்பு” என்று விளம்பரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் தலையை சுத்தமாக வைத்து இருக்கும். ஷாம்பு போட அவசியமே இல்லை. சொல்லபோனால் ஷாம்பு அந்த ஆயிலை தலையில் இருந்து அகற்றிவிடுகிறது. இதனால் தலைமுடி புதிதாக இருப்பதா இருந்தாலும் இது முடிக்கு மிகுந்த கெடுதல்.
சிலர், குழந்தையின் தலையில் முகப் பவுடரைப் போட்டு விடுவார்கள். இதுவும் தவிர்க்கப்பட வேண்டியதே. இந்த பவுடர், தலையில் உள்ள சின்னஞ்சிறு துவாரங்களை அடைத்துவிட வாய்ப்புண்டு.
குழந்தைகளுக்கு முடி வெட்டியபிறகு தலைக்கு குளிக்க வேண்டும் எனில் தலையில் நீரை மட்டும் விட்டு முடியை மசாஜ் செய்தாலே போதும். ஐந்து நிமிட மசாஜ் முடியை சுத்தமாவும் ஆரோக்கியமாகவும் வைத்து இருக்கும்.
தவிர்க்கமுடியாமல் குழந்தைகளுக்கு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டியநிலை வந்தால், உங்கள் மருத்துவரை அணுகி நல்ல ஷாம்பு எது என்று கேட்டு, செலவை பார்க்காமல் வாங்குங்கள். குறிப்பாக அதிகம் வாசனை மற்றும் நுரை வராத ஷாம்பாக பார்த்து வாங்குங்கள்.