Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு பொம்மை வேண்டாம்

குழந்தைகளுக்கு பொம்மை வேண்டாம்

35

23-plastic-toys-1300குழந்தைகளை சந்தோஷப்படுத்துவதற்காக பல வண்ணங்களிலும், பல மாடல்களிலும் ஏராளமான பொம்மைகள் கிடைக்கின்றன. குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நாமும் தொடர்ந்து இத்தகைய பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம்.

குழந்தைகள் விளையாடும் இந்த பொம்மைகள் பி.வி.சி. என்று சொல்லப்படுகிற ‘பாலிவினைல் குளோரைடு’ என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பாட்டில், நிப்பிள், ரப்பர் வாத்துக்கள், பல் முளைக்கும் போது கடிப்பதற்காக கொடுக்கப்படும் சிறு விளையாட்டுப் பொருட்கள் எல்லாம் இந்த பொருளால் தயாரிக்கப்படுபவைதான்.

பி.வி.சி. என்பது சாதாரணமாக வளையும் தன்மை கொண்ட பொருள் கிடையாது. அதனால், இந்த பி.வி.சி.யை வளைப்பதற்காக இதனுடன் பதாளேட் பிளாஸ்டிசைசர் என்கிற ஒரு பொருளை சேர்கிறார்கள். இது சேரும் போது பிவிசி வளையும் தன்மை பெறுகிறது. இப்படியாக வளையும் தன்மைக் கொண்ட வினைல் பொருட்கள் பல ஆண்டுகளாக உடையாமலும் வண்ணம் மாறாமலும் இருக்கும்.

வளைப்பதற்காக சேர்க்கப்படும் பதாளேட் என்ற பொருள் விளையாட்டுப் பொருட்களின் எடையில் பாதியளவு கலந்திருக்கும். இது பிவிசியுடன் வேதி முறையில் இணைக்கப்படுகிறது. பதாளேட் பொருட்களை குழந்தைகள் வாயில் கடித்து விளையாடினால் அது கசிந்து வாய்க்குள் போகும். பிளாஸ்டிசைசர் குழந்தைகளின் எச்சிலில் கரையக்கூடியது.

இப்படி கரைந்த பிளாஸ்டிசைசர்கள் ரத்தம், நுரையீரல், கல்லீரல் ஆகிய இடங்களில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. இது என்னை மற்றும் கொழுப்பில் கரையக்கூடியது. இவை தரும் தீமைகள் பற்றி ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டது. அதில் மனித உடலில் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் புண்களை ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது.

மேலும் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்சினையை ஏற்படுத்தும். விந்து உருவாவதில் இடையூறு செய்யும். கல்லீரல், சிறுநீரகம் ஆகிய இடங்களில் கேன்சரையும், மோனோநியூக்கிளியர் செல்லுக்கேமியாவையும் உருவாக்குவதாக தெரிவிக்கிறது.

குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த தீமைகளை கருதி அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்து பிவிசி மூலம் தயாரிக்கப்படும் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களை நிறுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பெரும் கெடுதல் தருகிற வினைல் மற்றும் பிளாஸ்டிசைசர் உபயோகப்படுத்துவதை தயாரிப்பு நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப் பெற்று வருகின்றன. கூடுமானவரை நாம் நமது குழந்தைகளுக்கு பிவிசி விளையாட்டுப் பொருட்களை வாங்கிக்கொடுக்காமல் தவிர்ப்பதே நல்லது.