Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு தூக்கம் வருவதற்கான வழிமுறைகள் என்னென்ன?

குழந்தைகளுக்கு தூக்கம் வருவதற்கான வழிமுறைகள் என்னென்ன?

21

இன்றைய சூழலில், பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகள்கூட தூக்கமின்மையால் பெரிதும் அவதிப்படுகின்றனர். அதனால் அவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்துக்கு அளவே இல்லை. தூக்கம் இழப்பதால் குழந்தைகள் சந்திக்கிற உடல்மற்றும் மன ரீதியான பாதிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

1. குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழுவதை குழந்தைகளுக்குப்பழக்க வேண்டும்.

2. தவிர்க்க இயலாத நாட்களில் கொஞ்சம் மாற்றம் இருந்தால் தவறில்லை.

3. இஷ்டத்துக்குத் தூங்கி, இஷ்டத்துக்கு எழுகிற பழக்கத்தால் நாமே தூக்கமின்மையை உருவாக்குகிறோம்.

4. தூங்குவது 5 மணி நேரம் என்றாலும் தொடர்ச்சியான தூக்கமாக இருக்கவேண்டும்.

5. இடையிடையே விழித்து, தூங்குவது ஆரோக்கியமான தூக்கம் இல்லை.

6. காலையில் எழுந்த பிறகு, உடலில் வெளிச்சம் படுகிற மாதிரி குழந்தைகளைசிறிது நேரம் நடைப்பயிற்சி செய்யப் பழக்க வேண்டும்.

7. உடற்பயிற்சிகள்,விளையாட்டு போன்றவற்றைப் பின்பற்றினால் உடல் தானாகவே சோர்ந்து, ‘தூக்கம் வேண்டும்’ என்று கெஞ்சும்.

8. மாலையில் குளிப்பது, இரவு உணவை 8 மணிக்குள் சாப்பிடுவது, தூங்கப்போவதற்கு முன் பால், வாழைப்பழம், தேன் போன்றவற்றை எடுத்துக் கொள்வது தூக்கத்துக்குஉதவிசெய்யும்.

9. தூங்கச் செல்லும் ஒரு மணிநேரத்துக்கு முன்பு செல்போன், கம்ப்யூட்டர், டி.வி. போன்றவை தவிர்ப்பது நல்லது.

10. படுத்தே படிப்பது, டி.வி. பார்ப்பது, நொறுக்குத்தீனி கொறிப்பது போன்ற மற்ற வேலைகளை படுக்கையில் தவிர்க்க வேண்டும்.

பல்வேறு அழுத்தங்களால் நம் நாள் முழுவதும் பதற்றங்களாலேயே நிரம்பியிருக்கிறது. இதன் எதிரொலியாக படுக்கையில் விழும்போதும் பல பிரச்னைகள் மனதை அரிப்பதால் தூக்கம் தொலைகிறது. ‘இன்று இரவு நன்றாகத் தூங்கி எழுந்து,காலையில் தெம்பாகபிரச்னைகளை ஒரு கை பார்த்துக் கொள்ளலாம்’ என்ற மனநிலையோடு தூங்குங்கள்.

யாருக்கு எத்தனைமணி நேரம்?

1. பள்ளி செல்ல ஆரம்பிக்கிற 3 அல்லது 4 வயதில் 9 அல்லது 10 மணி நேர தூக்கம் இருக்கும்.

2. 4 முதல் 8 வயதில் இரவு 9 மணி நேரம், மதியம் ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் தூங்குவார்கள்.

3. வளர் இளம் பருவத்தினருக்குஇரவில்8 மணி நேரம் தூக்கம் வேண்டும். முடிந்தால் 9 மணி நேரத் தூக்கம் நல்லது.

4. பெரியவர்கள் 6 மணி நேரம்தூங்குவதே போதுமானது! தூங்குவது 5 மணி நேரம் என்றாலும் தொடர்ச்சியான தூக்கமாக இருக்க வேண்டும்.

5. தூக்கமின்மையால் 40 வயதுக்குமேல் ஏற்படும் ரத்த அழுத்தம்,நீரிழிவு, பக்கவாதம் போன்றகுறைபாடுகள், இளவயதிலேயே வரும் சாத்தியங்களும் உள்ளன.