Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் அவசியமா?

குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் அவசியமா?

24

201603311813500915_Oil-massage-for-children-necessary_SECVPFகுழந்தையைக் குளிக்கவைப்பதற்கு முன், சுத்தமான தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றைத் தடவிக் குளிப்பாட்டும் முன், மசாஜ் செய்வது நமது பாரம்பரியப் பழக்கம்தான்!

எண்ணெய் தடவி மசாஜ் செய்வதால் குழந்தைக்கு பல நன்மைகள்

குழந்தையின் தோல் சீராகப் பராமரிக்கப்படுகிறது.

குழந்தையின் உடல் வெதுவெதுப்பாக இருக்க உதவுகிறது.

குழந்தைக்கு உணவாகவும் ஒருவிதத்தில் பயன் தருகிறது.

குழந்தையின் எடை அதிகரிக்கிறது.

மன அழுத்தம் குறைவதால், குழந்தை அமைதி பெறுகிறது.

யார் எண்ணெய் மசாஜ் செய்யலாம்?

தாயின் தொடு உணர்வை குழந்தை மிகவும் விரும்புகிறது; எதிர்ப்பார்க்கிறது. அதனால், தாய் எண்ணெய் மசாஜ் செய்வது அதிகப் பலன் தரும். அப்பா, தாத்தா, பாட்டி, மற்ற உறவினர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் எண்ணெய் மசாஜ் தரலாம்.

எண்ணெய் மசாஜ் தரும் முறை

குழந்தை அமைதியாக, ஆனால் விழிப்புடன் இருக்க வேண்டும்.

பால் அல்லது உணவு கொடுத்து 2 மணி நேரத்துக்குப் பிறகு மசாஜ் தரலாம்.

தினமும் 2 அல்லது 3 முறை அல்லது ஒரு முறையாவது மசாஜ் செய்வது நல்லது.

சுமார் 30 நிமிடங்களாவது தொடர்ந்து மசாஜ் செய்தால் நல்ல பலன் தெரியும்.