குழந்தைகளுக்கு வரும் சளி , இருமல் :
இருமல் என்பது ஒரு முக்கியமான பாதுகாப்பு வழிமுறை ஆகும் , ஏனென்னில் இது நமது மூச்சுகுழாயில் தேவையற்ற தூசு , கிருமிகள் , நச்சு நுழைவதை தடுக்கிறது.
இருமலின் அடிப்படை :
காற்று உள்ளே இழுக்கப்பட்டு , தொண்டை சதைகள் சுருங்கியபின் அதிக அழுத்தத்துடன் காற்று வெளித்தள்ளி விடுவிக்கபடுகிறது . இதனால் நுரையீரல் உள்ளே தூசு,நச்சு செல்லாமல் தடுக்கபடுகிறது .
சுரத்தை போலவே இருமலும் நமக்கு நன்மையையே செய்கிறது . எனவே அளவான இருமல் நல்லது , இதற்க்கு வைத்தியம் தேவை இல்லை . இருமல் அதிகமாக வந்து மூச்சு விட சிரமம் , தூக்கம் இல்லாமை , தொண்டை வலி போன்றவை வந்தால் மட்டுமே இருமல் குறைய syrup எடுத்துகொள்ளவேண்டும் .
சிறு குழந்தைகளின் இருமலை முற்றிலும் நிறுத்தக்கூடாது , ஏனெனில் இருமல் மூலமே உள்ளே தேங்கும் சளி வெளியேறும் .இருமலை நிறுத்தினால் அவை நுரை யில் சென்று atelectasis என்ற நுரையீரல் சுருங்கும் தன்மையை ஏற்படுத்திவிடும் .
இருமலுக்கான தொடு நரம்புகள் காதிலும் உண்டு , அதனால் தான் காது குடையும் போது இருமல் வருகிறது .
மருத்துவம் :
குழந்தைகளுக்கு முற்றிலும் இருமலை கட்டுபடுத்த கூடாது
எதனால் இருமல் வருகிறது என்று பார்த்து ஆதற்கு வைத்தியம் செய்ய வேண்டும்
வறட்டு இருமல், தொண்டை வலி இருந்தால் இருமல் மருந்து தரலாம்
தூக்கம் இல்லாமல் இருமுதல் , பால் குடிக்கமுடியாமல் இருமல் , இருமலின் முடிவில் வாந்தி – ஆகிய நேரங்களில் மருந்து தரவேண்டும்
மூக்கின் முன்புறம் நீர் வடிவது போல , மூக்கின் பின் புறமும் தொண்டையில் நீர் வடியும் இதனால் இருமல் வந்துகொண்டே இருக்கும்(postnasal drip ) . இதற்க்கு மூக்கு சொட்டு மருந்து போட்டாலே இருமல் குறைந்து விடும்.
சைனுசிடிஸ் என்ற நிலையிலும் சைனசில் இருந்து நீர் , சளி கசிவதால் தொடர்ந்து இருமல் இருக்கும் .
வெண்ணீரில் உப்பு போட்டு வாய் கொப்புளிக்க வேண்டும்
மூக்கிற்கு சொட்டு மருந்து போட்டு வரவேண்டும்
வெநிரில் ஆவி பிடிக்கவேண்டும் .
எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவதை தவிர்க்கவேண்டும் .
எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும் :
சளி மஞ்சளாகவோ , பச்சையாகவோ , கெட்டியாகவோ மாறும்போதும்
முச்சு விடும் வேகம் அதிகரிக்கும் போதும் – இது வயதிற்கு ஏற்ப மாறும்.
பிறப்பு முதல் 2 மாதம் வரை – > 60 / ஒரு நிமிடம்
2 மாதம் முதல் ஒரு வயது வரை ->50 /ஒரு நிமிடம்
ஒரு வயது மேல் 5 வயது வரை -> 40 / ஒரு நிமிடம்
குழந்தை அழாமல் உள்ளபோது குழந்தை மூச்சு விடும் வேகத்தை ஒரு முழு நிமிடத்திற்கு எண்ணவேண்டும். மேலே சொன்ன அளவை விட அதிகமாக இருந்தால் அது நிமோனியா சளியின் அறிகுறியாக இருக்கலாம் .