ஆரஞ்சு பழ தோலை காய வைத்து பவுடராக்கி தண்ணீருடன் சேர்த்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமம் பளபளக்கும்.
அரை மூடி எழுமிச்சை பழச்சாறில் ஒரு டம்ளர் சுடு தண்ணீரை கலந்து, சிறிது தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருதல் நல்லது. இதனால் மேனி மினு மினுப்படைவதோடு, உடம்பில் உள்ள தேவையற்ற சதைகள் குறையும்.
எண்ணெய் சருமம் உடையவர்கள் ரோஸ் வாட்டரை ஒரு பஞ்சில் நனைத்து முகத்தில் தடவ, சருமம் மினு மினுக்கும். தோலில் தழும்பு, கீறல் வடுக்கள் உள்ளவர்கள் தக்காளி பழக்கூழுடன், தயிர் கலந்து தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர தழும்புகள் மறையும்.
மக்காச்சோள மாவு மற்றும் தயிர் கலந்த கலவையை தினசரி உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் மின்னுவது நிச்சயம். தோல் வறட்சி உள்ளவர்கள் அடிக்கடி தண்ணீரில் உடலை கழுவக்கூடாது.
அப்படி கழுவும்போது ஏற்கனவே குறைந்துள்ள ஈரப்பசை மேலும் குறைந்துவிடும். பாரபின் எண்ணெய், வாஸ்சலின் போன்ற தைலங்களும் பயனளிக்கும்.கால்களில் உள்ள வெடிப்புகளுக்கு யூரியா மற்றும் ஆண்டிபயாடிக் கலந்த கிரீம்களை உபயோகிக்கலாம்.