சுவையான குலோப் ஜாமுன், என்னங்க சொல்லும்போதே நாவில் எச்சில் ஊற்றெடுக்கிறதா? சரி சரி அவசரப்படாதீங்க, இந்த
குலோம் ஜாமுன் எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சர்க்கரை சேர்க்காத கோவா – 300 கிராம்
மைதா மாவு – 100 கிராம்
எண்ணெய் – அரைகிலோ
சர்க்கரை – அரைகிலோ
செய்முறை
கோவாவில் மைதாமாவைச்சேர்த்து நன்றாகப்பிசைந்து 10 நிமிடங்கள் கழித்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்த வுடன் லேசான தீயில் உருண் டைகளை பொரித்தெடுக் கவும். பாகு காய்ச்ச இரண்டு பங்கு சர்க்கரைக்கு ஒரு பங்கு தண்ணீர் சேர்த்து பாத்திரத் தை அடுப்பி்ல் வைக்கவும். சர்க்கரை பிசுக்குப் பதம் வந்நவுடன் இறக்கிவிட்டு, மிதமான சூட்டிற்குக் கொஞ்சம் அதிகமான சூட்டில் பாகு இருக்கும்போது, பொரித்த ஜாமுன் உருண்டைக ளைப் போட்டு ஊறவைக்கவும்.