உதிரியாக வடித்த சாதம்-2கப்
கேப்ஸிகம்-1
புளிக்கரைசல்-1/4கப்
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
சாம்பார் பவுடர்-2 ஸ்பூன்
ட்ரை தேங்காய்த்துருவல்-1டேபிள்ஸ்பூன்
சர்க்கரை-1/2ஸ்பூன்
உப்பு
எண்ணெய்-2ஸ்பூன்
நெய்-1ஸ்பூன்
பட்டை-சிறுதுண்டு
கிராம்பு-1
கடலைப்பருப்பு,உளுந்துப்பருப்பு,முந்திரி-சிறிது
செய்முறை
* கேப்ஸிகமை சதுரத்துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய், நெய் காயவைத்து பட்டை, கிராம்பு
தாளித்து, க.பருப்பு, உ.பருப்பு, முந்திரிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக
வதக்கவும். பின்னர் கேப்ஸிகம் துண்டுகளை சேர்த்து, மிதமான தீயில் வதக்கவும்.
* கேப்ஸிகம் ஓரளவு வதங்கியதும் புளிக்கரைசல்,உப்பு,ம.தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
* புளிக்கரைசல் நன்கு கொதித்து பச்சைவாசம் அடங்கியதும் சாம்பார்தூள்,தேங்காய்த்துருவல்,சர்க்கரை சேர்த்து கிளறவும்.தண்ணீர் வற்றியதும் உதிரியாக வடித்த சாதம் சேர்த்து கிளறவும்.
* கேப்ஸிகம் ரைஸ் ரெடி! உருளை சிப்ஸ் உடன் பரிமாறலாம். லன்ச் பாக்ஸுக்கு பொருத்தமான உணவு இது.