Home சூடான செய்திகள் கிஸ் ஆப் லவ்: முத்தமிட்டு ஒரே நாளில் பிரபலம் ஆன ரஷ்மி நாயர், ராகுல்

கிஸ் ஆப் லவ்: முத்தமிட்டு ஒரே நாளில் பிரபலம் ஆன ரஷ்மி நாயர், ராகுல்

38

19-1447917618-reshmi-r-nair2-02-600திருவனந்தபுரம்: கிஸ் ஆப் லவ் என்ற போராட்டத்தை நடத்தி மக்கள் முன்னிலையில் கட்டிப்பிடித்து முத்தமிட்டு ஒரே நாளில் பிரபலம் ஆன மாடல் ரஷ்மி நாயர், கணவர் ராகுல் பசுபாலன் விபச்சார வழக்கில் கைதாகியுள்ளனர். கடந்த ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள காபி கடை ஒன்றில் புகுந்த கும்பல் அதை தாக்கி சேதப்படுத்தியது. காபி கடை என்ற பெயரில் அசிங்கம் நடத்துவதாகக் கூறி அந்த கும்பல் அவ்வாறு செய்தது. இந்த சம்பவத்தை அடுத்து தான் மாடல் ரஷ்மி நாயரும், அவரது கணவர் ராகுல் பசுபாலனும் மிகவும் பிரபலம் ஆனார்கள். கோழிக்கோடு சம்பவத்தை கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
19-1447917421-rashmi-nair-rahul-600
கிஸ் ஆப் லவ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொச்சியில் கிஸ் ஆப் லவ் என்ற போராட்டத்தை ராகுலும், ரஷ்மியும் நடத்தினார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜோடி, ஜோடியாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர்.

ரஷ்மி பொது இடத்தில் போராட்டம் என்ற பெயரில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் அமர்ந்திருக்கையில் ரஷ்மியும், ராகுலும் மக்கள், மீடியா முன்பு முத்தமிட்டனர். அவர்கள் முத்திமிட்ட போட்டோ சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலம் ஆனது.
பிரபலம் கிஸ் ஆப் லவ் போராட்டம் நடத்தி முத்தமிட்டதால் ஒரே நாளில் பிரபலம் ஆனவர்கள் ரஷ்மியும், ராகுலும். அவர்களின் துணிச்சலை பலரும் பாராட்டினர்.

விபச்சாரம் இப்படி மக்களின் பாராட்டை பெற்ற ரஷ்மி மற்றும் ராகுல் ஆன்லைன் மூலம் ஆண்களை கவர்ந்து விபச்சாரம் செய்த வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.