வெண்ணெய் – 1 ஸ்பூன்
பட்டாணி – அரை கப் (வேக வைத்தது)
புதினா இலை – அரை கப்
வெங்காயத்தாள் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயத்தாளில் உள்ள வெங்காயம் – அரை கப் (பொடியாக நறுக்கியது) பூண்டு – 10 பல் (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – தேவையான அளவு
காய்கறி வேகவைத்த தண்ணீர் – 2 கப்
செய்முறை :
• கடாயில் வெண்ணெய் போட்டு பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும்.
• அடுத்து அதில் வெங்காயத்தாள், புதினா, முக்கால் பாகம் பட்டாணி போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
• பின்னர் அதில் காய்கறி வேகவைத்த தண்ணீர் 1 கப் ஊற்றி நன்கு வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கி ஆறவைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
• மீண்டும் இந்த அரைத்த கலவையை அடுப்பில் வைத்து மீதமுள்ள பட்டாணி, காய்கறி தண்ணீர், வெங்காயத்தாள் சேர்த்து சிறிது கொதி வந்ததும் மிளகு தூள் சேர்த்து இறக்கி பரிமாறவும்.
• சத்தான, சுவையான கிரீன் சூப் ரெடி