தசை மற்றும் எலும்புகளின் ஆரோக் கியத்துக்கு அதி அத்தியாவசியமான கால்சியம் சத்து குறைந்தால் அது பலவிதமான வலிகளுக்குக் காரணமா கலாம். ஆனால், பலருக்கும் அது கால்சியம் குறைபாட்டின் விளைவு என்பதே தெரிவ தில்லை. வலி நிவாரண மருந்துகளில் தொடங்கி, அறுவை சிகிச்சை வரை பல்வேறு சிகிச்சைகளையும் முயற்சி செய்து பார்த்துவிட்டு, வலியிலிருந்து விடுபட முடியாமல் வாழ்நாள் முழுக்க அவதிப் படுகிறார்கள். எளிமையாக சரி செய்யக் கூடிய பிரச்சினை இது… என்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார்.
கால்சியம் குறைபாட்டினால் உண்டாகக் கூடிய வலிகள், அவற்றைக் கண்டுபிடிக்கும் சோதனைகள், சிகிச்சைகள் என எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். தசைகளுக்கும், எலும்புகளுக்கும் தேவையான கால்சியம் சத்தை உருவாக்க வைட்டமின் டி சத்து மிக அவசியம். வைட்டமின் டியானது சூரியஒளியிலிருந்து மட்டுமே கிடைக்கக் கூடிய ஒன்று. நம் சருமமானது, சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி சத்தை தானே தயாரித்துக் கொள்ளும்.
அதுதான் உடலில் கால்சியம் சத்தைத் தக்க வைக்க உதவும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து வயதிலும், கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாட்டினால் அவதிப்படுகிறார்கள். சூரிய ஒளியே படாத சூழலில் வசிப்பவர்கள், வேலை பார்ப்பவர்கள், பால், இறைச்சி போன்றவற்றைப் போதுமான அளவு எடுத்துக் கொள்ளாதவர்களுக்கெல்லாம் இந்தப் பிரச்சினை வரும். கால்சியம் குறைபாடானது, தசைகளை வலுவிழக்கச் செய்வதுடன், தசைகளில் வலியையும் உண்டாக்கும்.
தசைகள் பலவீனமாவது, தசைப்பிடிப்பு, நாள்பட்ட கால்வலி, நாள்பட்ட முதுகு வலி, கால்களில் ஒருவித மதமதப்பு போன்ற அறி குறிகளும் தென்படலாம். உடல் பருமன், நீரிழிவு, இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கும் மறைமுகக் காரணமாகலாம். வலி என்றதும் பெரும்பாலான மக்கள், உடனடியாக வலி நிவாரண மாத்திரையை எடுத்துக் கொள்வார்கள். அதில் குணம் தெரியாவிட்டால், அடுத்தடுத்த கட்ட சிகிச்சைகளுக்குத் தாவி, ஒரு கட்டத்தில் அறுவை சிகிச்சை வரை போவார்கள். எதிலுமே பலன் இருக்காது.
சரியான வலி நிவாரண மருத்துவரை அணுகி, நோயின் அறிகுறியைச் சொல்லி, அதற்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி யின் அளவை ரத்தத்தில் கண்டுபிடிக்கக் கூடிய சோதனையை மேற்கொள்ள வேண்டும். அந்த அளவு போதுமானதாக இல்லை எனத் தெரிந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி, மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சையளிக்கத் தவறினால், எலும்புகள் வலுவிழந்து நொறுங்கிப் போகலாம். வயதானவர்களாக இருந்தால், அதன் தீவிரம் இன்னும் அதிகமாக இருக்கலாம். லேசான பொருளைத் தூக்கினாலே எலும்புகள் நொறுங்கலாம். சின்ன அடிபட்டாலே தொடை எலும்புகளும், முது கெலும்பும் தானாகவே நொறுங்கலாம். முதுகெலும்பு நொறுங்கு வதால் எலும்புகள் அழுத்தப்பட்டு, கால்கள் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.
இப்படி சாதாரண வலி முதல் வாழ்க்கையையே முடக்கிப் போடும் அபாய வலி வரை பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமான கால்சியம் குறைபாட்டை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதே புத்திசாலித்தனம்.
24 மணி நேரமும் ஏசி அறையிலேயே இருப்பது, வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன் லோஷன் தடவிக் கொள்வது, சருமம் வெளியில் தெரியாமல் உடல் முழுக்க மூடிக் கொண்டு செல்வது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். வெயிலே படாமலிருந்தாலும் ஆபத்து என்பதை மக்கள் உணர வேண்டும்…