Home பெண்கள் உடல் கட்டுப்பாடு கால்களுக்கு வலிமை தரும் சைக்கிளிங் பயிற்சி

கால்களுக்கு வலிமை தரும் சைக்கிளிங் பயிற்சி

26

இருதய ரத்த நாளத்தை சீர்படுத்தும் பிரிவில் நடைபயிற்சி கருவி (டிரட் மில்), சைக்கிளிங், இஎப்எக்ஸ் கருவி போன்றவை இருக்கும். டிரட்மில் கருவியில் மெதுவான, வேகமான நடைபயிற்சி மற்றும் ஜாகிங் மேற்கொள்ளலாம். இது உடலை வலிமைப்படுத்துவற்கு உதவுகிறது.

தேவையற்ற கலோரிகளை எரித்து கட்டுக்கோப்பான உடலை பெறுவதற்கு உறுதுணையாக இருக்கிறது. இஎப்எக்ஸ் கருவியானது மார்பு, கை போன்ற உடலின் மேல்பாகம் மற்றும் கால், தொடை போன்ற கீழ்பாகத்தை வலிமைப்படுத்துவதற்கு உதவுகிறது.

சைக்கிளிங் செய்வதன் மூலமும் கால்கள் வலுப்பெறுகின்றன. துடுப்பு படகு பயிற்சியானது உடல் முழுவதையும் சீர்படுத்துகிறது. இவ்வாறு தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம், உடல் வளையும் தன்மை, வலிமை, எதையும் தாங்கும் உடல் திறன் பெறலாம்.

கால்களால் பெடல் செய்வது போன்ற பயிற்சிகள் கால்களை வலுவானதாக ஆக்குகிறது. ‘லாட் புல் டவுன்‘ கருவியில் பயிற்சி செய்வதால் மார்பு பகுதிகள் நன்கு விரிவடையும். ஸ்மித், ஆப்ஸ் கருவிகள் உடலின் பல பகுதிகளுக்கும் பயிற்சி செய்ய பயன்படுகிறது