வெயிலில் முகம், கைக்கு அடுத்தப்படியாக பாதிக்கப்படுவது கால்கள் தான். அழகு வெறும் முகம் மற்றும் கைகளில் இல்லை. உடலின் அனைத்து இடங்களையும் அது குறிக்கும். பொதுவாக வெயிலில் அதிகம் படும் பகுதி மற்ற பகுதிகளை விட மிகவும் கருமையாக இருக்கும். இந்த கருமையை போதிய பராமரிப்பு கொடுத்து நீக்க வேண்டும். கைகளில் உள்ள கருமையை போக்க சில வழிகள்!!! இல்லாவிட்டால், அது மோசமான தோற்றத்தைத் தரும்.
எனவே சிலர் கால்களில் உள்ள கருமையை நீக்க அழகு நிலையங்களுக்குச் சென்று பணம் செலவழித்து பெடிக்யூர் செய்து கொள்வார்கள். ஆனால் அப்படி பணம் செலவழிப்பதற்கு பதில், பெடிக்யூரை வீட்டிலேயே எப்படி செய்வதென்று தெரிந்து கொண்டால், பணம் மிச்சம் அல்லவா? பாதத்தில் குதிகால் வெடிப்பு வந்துவிட்டதா? இத ட்ரை பண்ணுங்க… சரி, இப்போது கால்களில் உள்ள கருமையை நீக்கி, பாதங்களை மென்மையாக வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.
எலுமிச்சை மற்றும் உப்பு எலுமிச்சையை துண்டுகளாக்கி, அதில் உப்பு தூவி, அந்த எலுமிச்சை துண்டை கால்கள் மற்றும் பாதங்களில் 10-15 நிமிடம் தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
பாத ஸ்கரப் பாதங்களுக்கான ஸ்கரப் செய்வதற்கு, 3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் உடன், 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு கால்கள் மற்றும் பாதங்களில் 15 நிமிடம் மென்மையாக தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வொரம் 2-3 முறை செய்து வந்தால், கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, கால்கள் வெள்ளையாகவும், மென்மையாகவும் இருக்கும்.
ஆரஞ்சு தோல் ஆரஞ்சு தோலை வெயிலில் உலர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதங்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் மென்மையாக மசாஜ் செய்து கழுவ வேண்டும்.