Home சமையல் குறிப்புகள் காலையில் எனர்ஜி தரும் முட்டை சான்விச்

காலையில் எனர்ஜி தரும் முட்டை சான்விச்

25

captureதேவையான பொருட்கள் :

முட்டை – 4
கோதுமை பிரட் – 6 துண்டுகள்
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – 1/2 கப்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
பால் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிது உப்பைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, அதனுடன் பாலையும் ஊற்றி நன்றாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் பச்சை மிளகாய், தக்காளி, உப்பு, மிளகுத் தூள் போட்டு, கலந்து கொள்ளவும்.

* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதில் கலந்து வைத்திருக்கும் முட்டை கலவையை ஊற்றி, கிளறவும். அவ்வாறு கிளறும் போது தீயை சற்று குறைவில் வைத்து, சிறிது நேரம் வேக விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.

* இப்போது ஒரு பிரட் துண்டை எடுத்துக் கொண்டு, அதில் வெண்ணெயை தடவி, முட்டையில் பாதியை வைத்து, மற்றொரு பிரட்டிலும் வெண்ணெயை தடவி, மூட வேண்டும்.

* இதேப் போல் மற்ற 3 பிரட்களையும் செய்ய வேண்டும்.

* இப்போது ஈஸியான முட்டை சான்விச் ரெடி.

* இதனை தக்காளி சாஸ்-உடன் தொட்டு சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.