தேவையான பொருட்கள்:
• மீன் (வவ்வால், வஞ்சிரம் அல்லது எதாவதொரு மீன்) – 6 முதல் 8 துண்டுகள்
• வெங்காயம் – ண
• இஞ்சி – சிறிய துண்டு
• பூண்டு – 2 அல்லது 3
•பட்டை – ஒரு சிறிய துண்டு
• கிராம்பு – 2
• கொத்தமல்லி (தனியா) – 1 தேக்கரண்டி
• சீரகம் – ண தேக்கரண்டி
• மிளகு – ண தேக்கரண்டி
• பெருஞ்சீரகம் விதைகள் (சோம்பு) – ட தேக்கரண்டி
• உப்பு சுவைகேற்ப
ஊறவைக்க தேவையான பொருட்கள்:
• மஞ்சள் தூள் – ட தேக்கரண்டி
• மிளகாய் தூள் – ண தேக்கரண்டி
• எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
• சுவைக்கேற்ப
• எண்ணெய் பொறிக்க
செய்முறை:
1. வெங்காயம், பூண்டு, இஞ்சி, பட்டை, கிராம்பு, கொத்தமல்லி விதை, சீரகம், மிளகு, பெருஞ்சீரகம் விதைகள் இவற்றை தண்ணீர் சேர்க்காமல் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
2. மீனை நன்கு சுத்தமாக க்ழுவி நீரை சுத்தமாக வடித்துக் கொள்ளவும்.
3. மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு இவற்றை எல்லாம் கலந்து கொண்டு இதை மீனின் மீது நன்கு தடவவும்.
4. தடவிய கலவையுடன் மீனை சுமார் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
5. 30 நிமிடத்திற்கு பிறகு, படி 1 ல் அரைத்து தயாரித்த மசாலாவை மீனில் தடவி மேலும் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்
6.. ஒரு தோசை கல்லை சூடாக்கவும் (நான் ஸ்டிக் என்றால் நல்லது).
7. மசாலா தடவி ஊறவைத்த மீனை, இந்த தோசை கல்லில் போட்டு, மீனின் மீது எண்ணெயை 2 பக்கத்திலும் தெளிக்கவும்.
8. முதலில் நன்கு சூடாக்கி கொண்டு, பின் மிதமான தீயில் இந்த மீனை வேக வைக்கவும்.
9. மீனை இரண்டு புறமும் நன்கு பொன்னிறமாகும் வரை வேக வைத்து, வெளிப்புறம் முறுகலாகும் வரை வேக வைக்கவும்.
10. நன்கு நறுக்கிய வெங்காயம் மற்றும் எலுமிச்சையுடன் பரிமாறவும்.
11. நன்கு ருசியான & காரசாரமான மீன் வறுவல் தயார்.
12. அதிலும் சூடாக வேகவைத்த சாப்பாட்டுடன் சாப்பிடவும், என்ன எச்சில் ஊறுகிறதா? நீங்களும் வீட்டில் ஒரு முறை முயற்சித்துதான் பாருங்களேன்.
குறிப்புகள்:
• நான் இந்த செய்முறையை சிறிய அளவான வஞ்சிர மீனை பயன்படுத்தி செய்துள்ளேன், வவ்வால் போன்ற மீன் அல்லது எதாவதொரு மீனை பயன்படுத்தலாம்.
• நீங்கள் இதை எண்ணெயிலும் போட்டு பொரிக்கலாம்.
• இது ஒரு காரசாரமான வறுவல், எனவே உங்கள் ருசிக்கேற்ப சிவப்பு மிளகாய் தூளை உபயோகிக்கவும்.