Home உறவு-காதல் காதல் ராசிபலன்கள்

காதல் ராசிபலன்கள்

48

1418466196_F_newstig9389நீங்கள் காதலிக்கிறீர்கள் என்றால் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி முன்கூட்டியே திட்டமிட்டு இருப்பீர்கள். உங்கள் ராசியை வைத்து உங்கள் வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இராசிகளும் காதல் உறவுகளும்:
மேஷம்:
மேஷம் ராசி கொண்டவர்கள் காதலில் நாயகனாக திகழ்வார்கள். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர்கள் நிச்சயம் காதலிப்பார்கள், காதலிக்கப்படுவார்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள், தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்களது காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்கள்.
மிதுனம்:
காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ அல்லது நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர்கள். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வார்கள். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.
கடகம்:
கடக ரசிகர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்து வராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீது அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவார்கள். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையை இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவார்கள். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும்.
சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வார்கள். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பார்கள். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.
கன்னி:
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர்கள். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர்கள். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள்.
கடக ராசி இருப்பவர்கள் நல்ல குணம் உடையவர்கள். ஆனால், இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர்கள். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.
துலாம்:
எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர்கள். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும்.
பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார்கள். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.
விருட்சிகம்:
விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவார்கள். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவார்கள். தான் பழகுபவர்களிடம் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார்கள். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும்.
விருட்சிகம் ராசிகார்களுக்கு வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பவராகவும் இருப்பார்கள்.எப்போதும் உற்சாகமாக இருப்பார்கள். காதல் மற்றும் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார்கள். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார்கள். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.
தனுசு:
இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாலியாக இருப்பார்கள். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார்கள். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார்கள்.
ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார்கள். இவர்களுக்கு காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை அதிகமாக விரும்புவார்கள். அவர்களிடம் அதிக அன்பு செலுத்துவார்கள். தனுசு ராசிக்காரர்கள் மேஷம், மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்கள்.
மகரம்:
மகரம் ராசிகார்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால், காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர்கள் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம், காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. அனைவரையும் எளிதில் நம்பிவிடுவர்கள். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பார்கள். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பார்கள். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவார்கள்.
காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.
மீனம்:
மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில்லை. மீனராசிக் காரர்களின் சுபாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டதாக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவார்கள். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர்கள் நேசிப்பார்கள். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர்கள்.
இந்த ராசிக்காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார்கள். இந்த ராசிக்காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவார்கள். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர்கள். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர்கள். இவர்களுக்கு கன்னி ராசிக்காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.