Home உறவு-காதல் காதல் பண்ணாம சிங்கிளாக இருந்தா இதெல்லாம் அனுபவிக்கலாம்?…

காதல் பண்ணாம சிங்கிளாக இருந்தா இதெல்லாம் அனுபவிக்கலாம்?…

27

காதல் இல்லாத ஆளே இருக்க முடியாது தான். அன்பு என்னும் விஷயம் தான் இநத உலகத்தையே இயக்கிக் கொண்டிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் நாம் வாழ்க்கைத் துணையாக ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர் மட்டுமே உலகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இல்லையா?…

அந்த கண்மூடித்தனமான காதல் நம்மை பிற விஷயங்களை விட்டு, விலக்கிவிடுகிறது. நட்புகளை தூரமாக ஒதுக்கி வைத்துவிடுகிறது. அதேசமயம் இதுபோல் காதல் இல்லாமல் தனியாக சிங்கிளாக வாழ்பவர்களுக்கு தனக்கென தனியு ஒரு உறவு இல்லை என்ற வருத்தம் இருந்தாலும் நிறைய விஷயங்களில் அவர்களுக்கு கிடைக்கிறது.

அப்படி சிங்கிளாக இருப்பதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும்?… எப்படியெல்லாம் வாழ்க்கையை அனுபவிக்கலாம்?

சிங்கிளாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடலாம், அவர்களுடன் சேர்ந்து ஜாலியாக வெளியில் செல்லாம், இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

ஆனால், நீங்கள் காதலித்துக் கொண்டிருந்தால், உங்களின் முழு நேரமும் அவர்களுடனேயே செலவிட வேண்டியிருக்கும். அவர்களுடன் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்க வேண்டி வரும். அவர்களை சமாதானப் படுத்த வேண்டும். இப்படி உங்கள் உலகம் ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிவிடும்.

செலவுகள் மிச்சமாகும். காதலர்கள் வெளியில் சென்றால், ஒருவருக்கொருவர் பிடித்ததை வாங்கி கொடுக்க வேண்டும், அவ்வாறு வாங்கி கொடுக்காவிட்டால் தேவையில்லாமல் வீண் சண்டை வரும்.

ஆனால், சிங்கிள் வாழ்க்கையில் இந்த மாதிரி பிரச்னைகளே கிடையாது. நீங்களு ராஜா, நீங்களே மந்திரி. உங்களைப் பிடித்ததை வாங்கலாம். சாப்பிடலாம். ஜாலியாக உங்கள் மனசு சொல்வதைக் கேட்கலாம். பிடித்த இடத்துக்குச் செல்ல முடியும்.

அதிலும் குறிப்பாக, ஆண்கள் யாரை வேண்டுமானாலும் சைட் அடித்துக்கொள்ளலாம், ஆனால் உங்கள் துணையுடன் இருக்கையில் யாரேனும் பெண்ணை ஒரு நாள் சைட் அடித்திருப்பீர்கள், ஆனால் அதற்காக ஒரு வாரத்திற்கு சண்டை போட வேண்டியிருக்கும்.

சிங்கிளாக இருந்தால் சுதந்திரமாக இருக்க முடியும். ஆனால் காதலில் விழுந்தால், ஏதேனும் ஒரு பொறுப்பு இருந்துகொண்டே இருக்கும்.

போன் பேசுவது, ஒன்றாக சேர்ந்து வெளியில் செல்ல வேண்டும் என்ற நிபந்தனை, திட்டமிட்ட நாட்களை மாற்ற முடியாமல் திணறுவது என பல தொந்தரவுகள் இருக்கும்.

மன நிம்மதி குறைவாகத்தான் இருக்கும். ஏனெனில் எப்படி திருமணம் செய்வது, பணம் செலவளிப்பது என எப்போதும் எதைப்பற்றியாவது சிந்திக்கொண்டே இருக்க வேண்டும்.

இந்த சந்தோஷங்கள் வேண்டுமென்று நினைப்பவர்கள் யாரையும் காதலிக்காமல் இருக்கலாம். அதேசமயம் எனக்கே எனக்காக ஒரு ஆள் தேவை என்று நினைப்பவர்கள் தாராளமாக காதலிக்கலாம். அதில் இருக்கும் சுகமே தனி தான்.