Home சூடான செய்திகள் காதலையும், கள்ளக் காதலையும் வளர்ப்பதின் ராகசியம்

காதலையும், கள்ளக் காதலையும் வளர்ப்பதின் ராகசியம்

32

காதலையும், கள்ளக்காதலையும் வளர்ப்பதில் செல்போன் முதல் இடத்தை பிடித்துள்ளது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

நவீன உலகின் தகவல் தொடர்பில் செல்போன், இ,மெயில், சமூக இணை தளங்கள், வாட்ஸ் அப் என பல உள்ளன. இருந்தாலும் இவற்றில் முதில் இடத்தில் உள்ளது செல்போன்தான். காரணம் 24 மணி நேரமும் எளிதில் தொடர்பு கொள்ளும் வசதி. சிக்கனமான தகவல் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்தியது செல்போன் என்றே சொல்லலாம். சி.யு.ஜி, பூஸ்டர், எஸ்.எம்.எஸ் பூஸ்டர் என பல வசதிகளால் பலர் எந்நேரமும் செல்போனை காதில் வைத்தபடியே உள்ளனர், இளம் தலைமுறையினர் இரண்டு கட்டை விரலில் மின்னல் வேகத்தில் டைப் அடித்து எஸ்.எம்.எஸ் அனுப்பி கொண்டே இருக்கின்றனர். இந்த செல்போன் வரவால் அதிகம் பயன்அடைபவர்கள் காதலர்களும், கள்ளக்காதலர்களும் தான். காத லை வளர்க்க எத்தகைய முறையை பின்பற்றுகிறீர்கள்?’’ என தனியார் நிறுவனம் ஒன்று வயது வந்த ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆய்வு நடத்தியது.

திருமணம் ஆகாதவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 63 சதவீத பெண்களும், 56 சதவீத ஆண்களும் செல்போனை பயன்படுத்துவதாக கூறியுள்ளனர். 25 சதவீத பெண்கள் மட்டுமே பழைய முறையான நேரில் சந்திப்பதை பின்பற்றுவதாக கூறியுள்ளனர். 12 சதவீதம் பெண்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்துவதாக கூறியுள்ளனர். திருமணம் ஆகாத ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 43 சதவீதம் பேர் செல்போனை பயன்படுத்துவதாகவும், 32 சதவீதம் பேர் கம்ப்யூட்டரை பயன்படுத்துவதாகவும், 25 சதவீதம் நேரில் சந்தித்து கொள்வதாகவும் கூறியுள்ளனர்.

திருணம் ஆனவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 39 சதவீத பெண்கள் செல்போன் பயன்படுத்துவதாகவும், 32 சதவீதம் பேர் நேரில் சந்தித்து கொள்வதாகவும், 28 சதவீதம் பேர் கம்ப்யூட்டரை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். காதல் மற்றும் கள்ளக்காதலை ரகசியமாக வளர்ப்பதில் செல்போன் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது இந்த சுவாரஸ்யமான ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.