Home உறவு-காதல் காதலுக்கு உயிரூட்டும் எளிய டிப்ஸ்!

காதலுக்கு உயிரூட்டும் எளிய டிப்ஸ்!

19

காதலில் விழுந்த இளசுகளுக்கு இந்த யோசனை என்றால், நமக்கு எப்போது காதல் கதவை தட்டும் என எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இந்த வருடமும் காதலர் தினத்தில் தனியே இருக்ககூடாது என்ற கவலை. இந்த வருடம் கண்டிப்பாக ஒரு துணையை கண்டுபிடிக்க வேண்டுமென்ற வைராக்கியத்தோடு ஷாப்பிங் மால்கள், தீம் பார்க்குகள், தியேட்டர்கள், கோவில்கள், பீச், பார்க், தெரு‌க்க‌‌ள் போன்ற பல இடங்களில் இளசுகளின் கூட்டம் அலைமோதும்.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல், காதலில் விழுந்தவனுக்கு தான் அதிலிருக்கும் கஷ்டங்கள் தெரியும்.

காதலில் சிக்கிவிட்டால் ஒருவனின் நடை, உடை, பாவனை, குணம் என எல்லாமே ஒரு மாற்றத்திற்கு உள்ளாகும். இது அவனின் காதலியின் மனம்கவர அவன் எடுக்கும் முயற்சி. இதில் எந்த தவறும் இல்லை, ஆனால் காதல் வந்த புதிதில், காதலிக்காக எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு சில நாட்கள் கழிந்ததும் இதுபோன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் அதுவே விபரீதம் ஆகிவிடும்.

காதலர்களுக்குள் என்னதான் புரிதல் இருந்தாலும், அவ்வபோது சிறு ஆச்சிரியங்களும், பரிசு பொருட்களும் அந்த உறவிற்கு நீண்ட நாட்கள் உயிரூட்டும்.

அவ்வகையில், காதலில் விழுந்திருக்கும் புதிய ஜோடிகளும், காதல் கசிந்துவிட்டதா என யோசிக்கும் பழைய ஜோடிகளும், தனிமையில் வாடியது போதுமென்று தங்களின் காதலை தேடி அலைபவர்களும் தெரிந்து கொள்ளவேண்டிய சுவாரஸ்யமான லவ் டிப்ஸ் இதோ..

காதலருக்கு சிறிய பரிசு கொடுத்தாலும், புதுமையான முறையில் கொடுங்கள். உதாரணத்திற்கு ஒரு பூச்செண்டில் 12 ரோஜாக்கள் இருந்தால், அதில் 11 சிவப்பு ரோஜாக்கள் மற்றும் ஒரேயொரு வெள்ளை ரோஜாவை வைத்து கொடுத்து, அந்த வெள்ளை ரோஜாவை போல் நீ தனித்துவம் மிகுந்தவர் என கூறுங்கள்.

காதாலருக்கு பிறந்தநாள் என்றால், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பும்போது, காதலரின் பெற்றோருக்கு “நன்றி” என்று எழுதி ஒரு பூச்செண்டை அனுப்புங்கள்.

அவ்வபோது எதிர்பாராத ஆச்ச‌ரியங்கள் கொடுத்து உங்கள் துணையை திக்குமுக்காட வையுங்கள்.

முயன்றவரை ஒன்றாக நேரம் செலவழிக்க பாருங்கள். யோகா, நடை பயிற்சி, உடல் பயிற்சி ஆகிவற்றை இருவரும் ஒன்றாக செய்து பழகுங்கள்.

உங்களின் துணையை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய‌த் தயங்காதீர்கள்.

ஒரு விஷயத்தை பற்றி முடிவு செய்யும் முன் உங்களின் காதலரின் எண்ணம் என்னவென்று தெரிந்துகொண்டு செயல்படுங்கள்.

கையை பிடித்து கொள்ளுதல், தோலில் சாய்தல், செல்லமாக அடித்தல் போன்ற செய்கைகள் காதலில் மிக முக்கியமானவை என்பதை மறவாதீர்கள்.

எவ்வளவு பிசியாக இருந்தாலும் காதலுக்காக நேரம் ஒதுக்குங்கள்.

வருங்காலத்தை பற்றி இருவரும் சேர்ந்தே முடிவு செய்யுங்கள்.

ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து, மற்றவரின் எண்ணத்தை மதித்து, அன்பை பகிர்ந்து கொண்டால் இன்றைய காதலர்கள், காலம் முடியும் வரையிலும் காதலர்கள் தான்.