வெற்றி, தோல்வி என்பது மனித வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்று.
இரண்டையும் ஒரே மனப்பக்குவத்தோடு எதிர்கொண்டால் மட்டுமே வாழ்வில் ஜெயிக்க முடியும்.
அப்படிப்பட்ட வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஒன்று தான் காதல்…காதல்.. காதல்.
இந்த காதலில் விழுந்து வாழ்க்கை எனும் வெற்றிக்கனியை ருசிப்பவர்களை விட, காதலில் சொதப்புபவர்களே அதிகம்.
அப்படி காதலில் சொதப்பிவிட்டால் நீங்கள் செய்ய வேண்டியவை
தவறு உங்கள் மீது என்றால் அதனை ஒத்துக்கொண்டு, சொதப்பிய காதலை மீண்டும் புதுப்பிப்பதற்காக வழியினை பாருங்கள், ஏனெனில் சில உறவுகள் முக்கிய காரணங்கள் இல்லாமல் பிரிந்துவிடும்.
ஆனால் ஒருவர் மீது ஒருவர் நல்ல அன்பு இருந்தும், தவறினை ஒத்துக்கொள்ளாமல் பிரிவினை சந்திக்க நேரிடும்.
அவ்வாறு, உறவினை புதுப்பிக்க முடியாதபட்சத்தில், அதனையே மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருக்காதீர்கள்.
ஏனெனில் உடைந்த கண்ணாடியை ஒட்ட வைக்க முடியாது, அப்படி ஒட்ட வைத்தாலும் அதில் இருக்கும் சில வித கீறல்கள் போன்று, அவ்வப்போது பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கும்.
எனவே அதனையே நினைத்துக் கொண்டிருக்காதீர்கள், ஆனால் அதனை ஒரு பாடமாக எடுத்துக் கொள்வது அவசியம்.
ஏனெனில், நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் நமது எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு பாடமே ஆகும், எனவே அதனை கருத்தில்கொண்டு அதே தவறை மீண்டும் செய்யாமல் இருங்கள்.
அடுத்ததாக, காதல் தோல்வி விடயத்தில் பலபேர் உங்களுக்கு அறிவுரை கூறினாலும், உங்களை நீங்களே மாற்றிக்கொண்டால் மட்டுமே புதுவித வாழ்வை தொடங்க முடியும்.
எனவே, புதுவிதசெயல்களில் ஈடுபடுவது மற்றும் நண்பர்களோடு சேர்ந்து உங்களுக்கு பிடித்தமான இடங்களுக்கு செல்வது என உங்களை நீங்கள் மாற்றிக்கொண்டால், ஒளிமயமான வாழ்வு பிறக்கும்.