ஏன்டா டேய் காதலிலும் ஆறு வகையா? என குமுற வேண்டாம். இருக்கு பாஸ் டிசைன்ல இருக்கு, அததான் நாங்க சொல்ல வரோம். ஆக்சுவலி வீ ஆர் ஃபீடிங் யூ வாட் திஸ் உலகம் டெல்லிங்!
தலைப்பை படித்தவுடன் அட போங்கடா என சிலர் உள்ளே வந்திருக்கலாம். சிலர் அப்படி என்ன சொல்லிட போறாங்க என நினைத்திருக்கலாம். ஆனால், படித்து முடித்த பிறகு உங்கள் தோழர்களில் யார், யார் எப்படிப்பட்ட காதலர்கள் என நீங்கள் நினைத்து சிரிக்கலாம்.
ஒருவேளை நீங்களே இந்த வகையில், எந்த வகை என அறிந்துக் கொள்ளவும் இது உதவும்.
சரி, வாங்க இழுத்தடிக்காம படிச்சு தெரிஞ்சுப்போம்….!
ஏரோஸ் (Eros) இது ஒரு நபரின் உடல் ரீதியான ஈர்ப்பு கொண்டு காதல் கொள்வது. பெரும்பாலும், “எனக்கு வேணும்…” என காதலிக்க அடம்பிடிக்கும் அன்பர்களுக்கு இப்படிப்பட்ட காதல் தான் வாய்க்கும். அவர்களுக்குள் மிக அரிதாக தான் மன ரீதியான எமோஷனல் கனக்ஷன் உண்டாகும். இவர்கள் ஆரம்பக் கட்டத்தில் செம்ம ஸ்பீடாக காதலிப்பார்கள். வேறு அழகான, வடிவான நபர்களை காணும் போது இவர்களது எண்ணம் அலைபாயும். ஆரம்பத்தில் இருக்கும் அந்த ஈர்ப்பு போக போக இருக்காது.
லூட்ஸ் (Ludus) விளையாட்டாக, விளையாட்டுத்தனமாக, மிக இயல்பாக, திரைப்பட வசனம் எல்லாம் பேசாமல் காதலிப்பவர்கள். இவர்களுக்குள் பெரிதாக கமிட்மென்ட் என ஒன்றும் இருக்காது. இவர்களை காதலிக்கும் போது இவன் நம்மள ஏமாத்திட்டு ஓடிடுவானோ என்ற எண்ணம் துணைக்கு எழலாம். இவர்கள் தனக்கு போதுமான அளவு தான் உறவில் ஒன்றி இருப்பார்கள். மிக குறைவாக தான் பர்சனல் தகவல்கள் பகிர்வார்கள். இவர்களிடம் தன்னை தானே காதலிக்கும் குணம் அதிகமாக இருக்கும்.
மேனியா (Mania) பொசசிவான காதலர்கள்! என் புருஷன் தான், எனக்கு மட்டும் தான்… என காதலிப்பவர்கள். தங்கள் துணை என்ன செய்தாலும் அதை கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள், கட்டுப்படுத்தி கொண்டே இருப்பார்கள். காதலிப்பதற்கும், தொல்லை செய்வதற்கும் வித்தியாசம் புரியாமல் வாட்டி எடுப்பார்கள். இவர்களுக்கு தங்கள் துணை மீது அதிக நம்பிக்கை இருக்காது. அதிக காதலை வெளிப்படுத்தும், எதிர்பார்க்கும் நபர்கள். எளிதாக காயப்பட்டுவிடுவார்கள், மனதளவில். காலாவதி ஆகிவிட கூடாது என பொத்திக் பொத்திக் காதலிப்பார்கள்.
அகப்பே (Agape) சுயநலம் அற்ற காதல், சரி உனக்கு எது சரின்னு படுதோ, அத செய். என காதல் துணைக்கு சுதந்திரம் அளிக்கும் நேர்மையான காதலர்கள். காதலை பெறுவதை காட்டிலும், கொடுப்பதில் தான் அதிக கவனம் கொள்வார்கள். இப்படி ஒரு காதலர் கிடைத்தால் விட்டுவிட வேண்டாம். எல்லையற்ற காதல் கொண்டிருப்பார்கள். நேர்மையாக காதலிப்பார்கள். துணைக்கு தேவையான அனைத்தும் வகையிலும் உதவுவார்கள்.
பிரக்மா (Pragma) பிராக்டிகல் சென்ஸுடன் காதலிக்கும் நபர்கள். எதையும் மேம்படுத்தி காண மாட்டார்கள். இருப்பதை உள்ளப்படி கூறி, இது சரி, இது தவறு என நேருக்கு நேர் கூறும் காதலர்கள். இவர்களுக்கு காதல் மட்டும் போதாது, பொருளாதார நிலை, ஆன்மிகம், குடும்ப வரலாறு, கலாச்சாரம் என அனைத்து வகையிலும் நமக்கு ஒத்துவருமா? வராதா? என யோசித்து காதலிக்கும் கால்குலேட்டர் காதலர்கள். பாகுபாடு காண்பர். ஒருவரை தேர்வு செய்யும் முன்னர் அனைத்திலும் கவனமாக இருப்பார்கள்.
ஸ்டோர்ஜ் (Storge) தோழமையான காதலர்கள்! இவர்களுக்குள் அதிக நட்புறவு இருக்கும். நீ என் காதலி, நீ என்னுடன் மட்டும் தான் நேரம் செலவழிக்க வேண்டும், அவன் யாரு, அவன் ஏன் ஃபேஸ்புக் பிரெண்ட், நீ ஏன் அவன் கூட சாட் பண்ற என எந்த தொல்லையும் இருக்காது. நட்பெது, காதல் எது, காமம் எது என அனைத்தும் அறிந்த காதலர்கள். இவர்கள் உடல் தோற்றம் கண்டு காதலிக்க மாட்டார்கள். நிலையான காதல். டிராமா எல்லாம் செய்ய மாட்டார்கள். இயற்கையாக காதலிப்பார்கள்.