Home உறவு-காதல் காதலியை அசத்த சில சூப்பர் ஐடியாஸ்!

காதலியை அசத்த சில சூப்பர் ஐடியாஸ்!

21

காதலர் தினத்தன்று என்ன செய்து காதலியை அசத்தலாம் என்று யோசிப்பவர்களுக்கு இந்த செய்தி. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் காதலர் தின கொண்டாட்டம் என்றாலே ஒரு கும்பல் காதலர்களை கண்டிக்க கிளம்பிவிடுகிறது. இந்நிலையில் காதலர் தினத்தன்று காதலியை எப்படி அசத்தலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்,

கவிதை: யாரோ எழுதிய கவிதை உள்ள வாழ்த்து அட்டையை அளிக்காமல் நீங்களே சொந்தமாக ஒரு கவிதை எழுதலாமே.

செல்போன்: காதலர் தினத்தன்று செல்போனும் கையுமாக இல்லாமல் காதலியுடன் மனம் விட்டுப் பேசுங்கள்.

நடை: காதலியின் கைகோர்த்து தூரம் பார்க்காமல் நடந்து செல்லுங்கள். நடந்து செல்லும்போது பேசினாலும் சரி, பேசாவிட்டாலும் சரி அது அழகு தான்.

டின்னர்: இரவு நேரம் ஏதாவது ஹோட்டலில் உங்கள் காதலிக்கு பிடித்த உணவை மெழுவர்த்தி வெளிச்சத்தில்(கேன்டில் லைட் டின்னர்) சாப்பிடலாம். கேன்டில் லைட் டின்னரா, அவ்வளவு பணம் இல்லையே என்று நினைப்பவர்கள் உங்கள் சக்திக்கு ஏற்ற இடத்தில் காதலிக்கு பிடித்த உணவை வாங்கிக் கொடுக்கலாம்.

பரிசு இல்லையா?: ஐடியா தருகிறேன் என்று என்ன பரிசு கொடுப்பது என்று கூறவே இல்லையே என்று நினைக்கிறீர்களா?. நீங்கள் கொடுக்கும் பரிசை விட விலை மதிப்பில்லாதது நீங்கள் உங்கள் காதலியுடன் செலவிடும் நேரம். இதை விட வேறு பரிசு தேவையா?