காதலிப்பதுக்குமுன் தெரிஞ்சுக்கவேண்டியது. நமக்கான ஜோடியை பொருத்தமானதாக அமைத்துக்கொள்ள நாம் பெரும் எதிர்பார்ப்புடன் இருப்போம். காதல்ப் படங்கள் நம் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும்.
காதலிப்பதுக்குமுன்
இன்றைய காலகட்டத்தில் காதலானது பல நவநாகரிக உறவு முறைகளைக் கொண்டது. உங்களுக்கு இணையான ஜோடியைத் தேர்ந்தெடுக்கும் போது கவனிக்கவேண்டியவை
நம்பிக்கையான வாழ்க்கை:-
நாம் தேர்ந்தெடுக்கப்போகும் துணையானது வாழ்நாள் முழுவதும் எவ்விதப் பிரச்னையும் இல்லாமல், ஒத்துப்போவபராக இருப்பாரா என அறிந்துகொள்ளவேண்டும். இணை என்பது நமது எல்லா விடயத்திலேயும் ஒத்துப்போறவராக இருப்பார் எனின் அவரின் பேச்சு, பாவனை போன்றவற்றிலேயே கண்டுபிடிக்கலாம்.
காதலிப்பதுக்குமுன்
முந்தைய காதல்:-
நாம் சந்தித்த காதல்த் தோல்விகள் எல்லாமே நமக்கு ஓர் அனுபவமே. அவை அனைத்தும் நமக்கு ஓர் பாடமாய் அமைந்துள்ளது. நீங்கள் உங்களுக்கான தேவை, உங்களின் முன்னுரிமை, உங்களின் நம்பிக்கை எதற்கு என எடுத்துச் சொல்வதுக்குக் கிடைத்த வாய்ப்புகள் அவை.
காதலிப்பதுக்குமுன்
நேர்மை:-
நீண்டகால நட்பு காதல். பேச்சை எடுக்கும் போது பின்வாங்கினால், அதற்கான காரணத்தைக் கண்டுபிடியுங்கள். அவருடன் நீங்கள் நேர்மையுடன் இருந்தால் போதும். நீங்கள் உங்களின் போக்கிலில்லாது, உங்கள் இணையின் பிடித்தவராக இருக்கிறீர்களா என பாருங்கள்.
காதலிப்பதுக்குமுன்
அணுகுதல்:-
சந்தேகம் என்பது காதலர்களின் நடுவே வரக் கூடாததொன்றாகும். மற்றும் நீங்கள் முழு நம்பிக்கையையும் வைத்து கற்பனையை வளர்த்துக்கொள்ளாதீர்கள். எதுவும் நடக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்
காதலிப்பதுக்குமுன்
நம்பகத்தன்மை:-
காதலை திரும்பத் திரும்பத் சோதிக்காதீர்கள். உங்களுக்காக இணை அனைத்தையும் செய்யவேண்டுமென எதிர் பார்க்காதீர்கள். அது வினையிலேயே முடியும்.
காதலிப்பதுக்குமுன்
அளவுக்கதிகமான பாசம்:-
அளவுக்குமிஞ்சியப் பாசமானது சிறு சண்டைகளில் கூட உங்களை உடலளவிலும், மனதளவிலும் காயப்படுத்திவிடும். ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழிக்கு அமையக் குண்டூசி விழுந்தாக்கூட குண்டு விழுந்தமாரி இணையுடன் சண்டை சச்சரவுகள் வரும்.
காதலிப்பதுக்குமுன்
மனத்துவிட்டுப் பேசவேண்டும்:-
காதலில் மிக முக்கியமானது இதுவாகும். உங்கள் மனதில் தோன்றியதை மனம்விட்டுப் பேசுங்கள். உங்கள் ஜோடியின் விடயங்களை வெறுப்படையாமல் கேளுங்கள்.
காதலிப்பதுக்குமுன்
தீர்வு:-
ஒருவருக்கு ஒருவர் அன்பாயும் பாசமாயும் இருங்கள். யாருக்காயும் உங்களின் இணையைய் விட்டுக்கொடுக்காதீங்க. ‘ஒற்றுமையே பலம்’.