Home உறவு-காதல் காதலிக்கும் பெண்கள் திருமணத்திற்கு நோ சொல்ல காரணம்

காதலிக்கும் பெண்கள் திருமணத்திற்கு நோ சொல்ல காரணம்

25

காதலுக்கு ஓகே சொல்லும் பெண்கள் திருமணதிற்கு நோ சொல்வதன் காரணங்கள்….
பெரும்பாலுமான பெண்களும், பெண்களுது வீட்டாரும் காதல் டூ கல்யாணத்திற்கு நோ சொல்வதற்கு காரணமாய் இருப்பது ஜாதி, மதம். வேறு ஜாதி, வேறு மதம் என தெரிந்திருந்தும் பின் விரும்பியது எதற்கு. காதலிக்கும் போது வராத ஜாதி, மதம் திருமணம் என்றவுடன் வருவது ஏன். பெற்றோர் அவர்களது கெளரவம் பாதிக்கும் என்ற காரணத்தாலேயே காதல் டூ கல்யாணத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.
இதெல்லாம் ஏனோ காதலிக்கும் முன் பெண்கள் யோசிப்பதே இல்லை. காதல் திருமணம் செய்ய வேண்டும் என பெண்கள் கூறியவுடன் பெற்றோர் கூறும் முதல் வார்த்தை தற்கொலை செய்து கொள்வேன் என்பதை தான். தாய், தந்தை குடும்பத்துடன் இறந்துவிடுவேன் என்று கூறுகிறார்கள் நமது சந்தோஷத்திற்காக அவர்களை ஏன் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் வெண்கள் மனதில் வருவதால் அவர்கள் திருமணம் என்று வரும்போது ஒதுங்கி விடுகிறார்கள்.
எனக்கு பிறகு எனது அக்காவும், தங்கையும் இருக்கின்றனர். நாம் திருமணம் செய்துக் கொள்வதன் மூலம், அவர்களது திருமண வாழ்க்கை பாதித்துவிடுமோ என பயமாக இருக்கிறது என்று கூறுவார்கள். காதலிக்கும் போது அக்கா, தங்கை எங்கே போனார்கள். இதை பெண்கள் காதலிக்கும் முன்பே யோசிக்க மாட்டார்கள்.
காதல் டூ கல்யாணத்திற்கு ஒட்டுமொத்த பெண் வீட்டாரும் கூறும் ஒரு மிக பெரிய காரணம் ஜாதகம் சரிவரவில்லை என்பது தான். இதற்காக பத்து பொருத்தம் பார்த்தா மனம் ஒருவர் மீது காதல்கொள்ளும். காதலில் ஜாதகம் தடையை வருவது இல்லை. காதலையே தடை செய்ய தான் ஜாதகம் உட்புகுத்தப்படுகிறது.