Home உறவு-காதல் காதலிக்காமல் இருக்கும் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்!

காதலிக்காமல் இருக்கும் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்!

32

காதல் செய்துவிட்டு, ஏன் செய்தோம் என்று பலர் வருத்தப்படுவதுண்டு. ஏனெனில் காதலில் விழுந்துவிட்டால், ஒருசிலவற்றை பின்பற்ற வேண்டிய அவசியம் மற்றும் கட்டாயம் இருக்கும். ஆகவே பலரும் காதல் செய்ய யோசிப்பார்கள். குறிப்பாக பெண்கள் நிறையவே யோசிப்பார்கள்.

மேலும் காதல் செய்துவிட்டு, காதல் செய்யாமல் இருப்பவர்களைப் பார்த்தால், சிலருக்கு பொறாமையாக இருக்கும். ஏனெனில் காதலில் விழாமல் இருந்தால், ராஜா/ராணி போல் இருக்கலாம். வாழ்க்கையை சந்தோஷமாக விருப்பத்திற்கேற்றவாறு வாழலாம். அதுவே காதலில் விழுந்துவிட்டால்,சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. எதைச் செய்வதாக இருந்தாலும், காதலன்/காதலியிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும்.

எனவே திருமணம் செய்வதற்கு முன்,காதலில் விழாமல் இருந்தால், பிடித்த அனைத்தையும் எந்த ஒரு இடையூறு இல்லாமல் மேற்கொண்டு,ஜாலியான வாழ்க்கையை வாழலாம். அதிலும் பெண்கள் வெட்கப்பட்டு, அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருந்த காலம் எப்போதோ மாறிவிட்டது. தற்போது பெண்களும் அனைத்தும் அவர்களது விருப்பத்துடன் இருக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். எப்படி ஆண்கள் காதலில் விழாமல் இருந்தால், சந்தோஷமாக இருக்கலாமோ, பெண்களும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.

குறிப்பாக தற்போதுள்ள பெண்களுக்கு சுதந்திரம் அவசியமாகிவிட்டது. அவர்களுக்கும் ஆண்களைப் போன்றே ஒருசில ஆசைகள் உள்ளன. அத்தகைய ஆசைகள் காதலில் விழுந்துவிட்டால் நடக்காது. எனவே தற்போதுள்ள பெண்கள் மிகவும் உஷாராக இருக்கின்றனர். ” இப்போது பெண்கள் காதலில் விழாமல் இருந்தால், எந்த மாதிரியான சந்தோஷத்தை அடையலாம் என்று அனுபவசாலிகள் கூறுவதைக் கொஞ்சம் கேளுங்களேன்.

சுதந்திரப் பறவை
காதல் செய்யாமல் இருந்தால், எந்த ஒரு செயலை செய்ய நினைத்தாலும் யாரிடமும் அனுமதிப் பெற வேண்டிய அவசியம் இல்லை. நினைத்ததை எந்நேரத்திலும் பயமின்றி, தடையின்றி செய்யலாம்.
சந்தோஷமாக ஷாப்பிங் செய்யலாம்
பெண்களுக்கு ஷாப்பிங் என்றால் மிகவும் பிடிக்கும். சில பெண்களுக்கு அதுவே பொழுதுபோக்காக இருக்கும். எனவே தனி ஒரு பெண்ணாக இருந்தால்,எந்நேரமும் சந்தோஷமாக ஷாப்பிங்கிலேயே இருக்கலாம்.

வேலையில் கவனம் செலுத்தலாம்
காதல் செய்யாமல் இருந்தால், அலுவலகத்தில் நல்ல ஆர்வத்துடன் வேலை செய்யலாம். அதிலும் அலுவலகத்தில் கொடுத்துள்ள இலக்கை அடைய எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.
நண்பர்களுடன் நேரம் செலவழிக்கலாம்
காதல் வந்துவிட்டால் நண்பர்களுடன் நேரம் செலவழிக்கவே முடியாது. ஆனால் காதலில் மட்டும் விழாமல் இருந்தால், நண்பர்களுடன் எங்கு வேண்டுமானாலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவழிக்கலாம்.
ஆண் நண்பர்களுடன் பேசலாம்
சில ஆண்கள், தங்களது காதலியை அவர்களது ஆண் நண்பர்களுடன் பேசவே அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், அதுவே தனி ஆளாக இருந்தால், எப்போது வேண்டுமானாலும், ஆண் நண்பர்களுடன் பேசலாம்.
எந்நேரமும் பணம் இருக்கும்
தனி ஒரு பெண்ணாக இருந்தால், பொறுப்புக்களானது மிகவும் குறைவு. மேலும் வாங்கும் சம்பளத்தை சேமிப்பதோடு, விருப்பப்பட்டவாறு செலவழிக்கலாம். குறிப்பாக எந்நேரமும் கையில் பணம் இருக்கும்.

பிடித்ததை செய்யலாம்
பொதுவாக காதல் வந்தால், காதலரைப் பற்றிய நினைவே அதிகம் இருக்கும். தமக்கு பிடித்ததை மற்றும் தம்மைப் பற்றி யோசிக்கவே நேரம் இருக்காது. ஆனால் தனி நபராக இருந்தால், தம்மைப் பற்றி அதிகம் யோசிக்கலாம். பிடித்தவாறு நேரத்தை செலவழிக்கலாம்.
நோ கமிட்மெண்ட்
காதல் செய்யாமல் இருந்தால், யாரை வேண்டுமானாலும் சைட் அடிக்கலாம். பிடித்தவாறு வாழ்க்கையை வாழலாம்.
அரட்டை அடிக்கலாம்
பொதுவாக நாம் நிறைய அழகான ஆண்களை பார்க்கலாம். அதனால் சிலருக்கு அந்த ஆண்களுடன் பேச வேண்டுமென்று தோன்றும். இவை அனைத்தையும் தனி ஒரு பெண்ணாக இருந்தால் செய்யலாம். குறிப்பாக, மேற்கூறிய அனைத்தும் ஆண்களுக்கும் பொருந்தும். என்ன நண்பர்களே! சரியா????