Home ஆரோக்கியம் கழிப்பறையில் பெண்கள் பின்பற்றும் கெட்ட பழக்கங்கள்.. அதிர வைக்கும் பக்கவிளைவுகள் இதோ!!

கழிப்பறையில் பெண்கள் பின்பற்றும் கெட்ட பழக்கங்கள்.. அதிர வைக்கும் பக்கவிளைவுகள் இதோ!!

27

அன்றாடம் நாம் பின்பற்றும் ஒருசில பழக்கங்கள் மூலம் தொற்றுக்களினால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகள் போன்றவை ஏற்பட காரணமாக அமைகிறது.

உதாரணமாக, டாய்லெட்டில் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துதல் இது போன்ற பல பழக்கங்கள் மூலம் உண்டாகும் நோய்த்தொற்றுக்கள் மற்றும் உடல்நலக் கோளாறுகள் ஆண்களை விட பெண்களை தான் எளிதில் தாக்குகிறது.

பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டியவை?

கழிப்பறையில் மொபைல் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதனால் டாய்லெட்டில் உள்ள கிருமிகள் உங்களை பாதிப்பதுடன், மொபைலிலும் தங்கி அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

நீண்ட நேரம் மொபைலை டாய்லெட்டில் பயன்படுத்துவதால், மூலநோய், ஆசனவாய் வீக்கம், ரத்தத்துடன் கூடிய மலம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

டாய்லெட்டில் உள்ள டிஷ்யூ பேப்பரை அதிகமாக பயன்படுத்தக் கூடாது. இதனால் ஆசனவாய் சுற்றி எரிச்சல், வீக்கம், அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

கைகளை கழிவிய பின் ஏர் ட்ரையரைப் (Air Dryer) பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அதனால் அங்குள்ள நுண்ணுயிர் மற்றும் கிருமிகள் வேகமாக பரவும். எனவே பேப்பர் அல்லது துண்டை பயன்படுத்துவது நல்லது.

சிறுநீர் அல்லது மலம் கழித்த பின் அப்பகுதியை சுத்தம் செய்வதற்கு, முன் பக்கத்தில் இருந்து பின் பக்கமாக துடைக்க வேண்டும். அதற்கு எதிர்மறையாக துடைத்தால், மலக்குடலில் உள்ள பாக்டீரியாக்கள் சிறுநீர் பாதைக்கு சென்று சிறுநீர்த்தொற்று பிரச்சனையை ஏற்படுத்தும்.

பிறப்புறுப்பை சுத்தம் செய்ய நறுமணம் மிக்க சோப்பு, ஸ்ப்ரேவை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அதனால் pH சமன்நிலை பாதிப்படைந்து அரிப்பு, எரிச்சல், மற்றும் புண்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.