Home ஜல்சா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்

40

ள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 25), இவரது மனைவி ரேகாசுவீட்டி (22). இவர்கள் ஆவடி, பஜார்நகர், 2-வது தெருவில் வசித்து வந்தனர். அசோக்குமார் அமைந்தகரையில் உள்ள தனியார் சைக்கிள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கடந்த 27.11.2009 அன்று வேலைக்கு சென்ற அசோக்குமார் வீடு திரும்பவில்லை என்று அவரது உறவினர் ரத்தன்லால் ஆவடி பொலிசில் புகார் அளித்தார். அதன் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ராஜஸ்தானில் நடந்த அண்ணன் திருமணத்திற்கு சென்ற ரேகாசுவீட்டி, கணவர் காணாமல் போன நிலையில் எந்த கவலையும் இல்லாமல் மிகவும் சந்தோஷமாக இருந்தார். மேலும் அவர் யாருடனோ அதிக நேரம் போனில் பேசியபடியே இருந்தார்.

இது அசோக்குமார் உறவினர்களுக்கு ரேகாசுவீட்டி மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர்கள் ஆவடி பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து ரேகாசுவீட்டியிடம் பொலிசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது கணவர் காணாமல் போகவில்லை என்றும், கள்ளக்காதலனோடு சேர்ந்து அவரை கொலை செய்து ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் உடலை வீசி வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து ஆவடி பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழுகிய நிலையில் கிடந்த அசோக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதைத் தொடர்ந்து கணவரை கொலை செய்ததாக ரேகாசுவீட்டியை பொலிசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் வேலூர் மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்த ரேகாசுவீட்டியின் கள்ளக்காதலன் சையத் ஆசீம் (22), இவரது நண்பர்கள் வினோத் (21), ஜூனைத் பாஷா (21) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

அசோக்குமாரை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பே ரேகாசுவீட்டிக்கும், சையத் ஆசிமுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. திருமணம் ஆன பிறகும் இவர்களது கள்ளக்காதல் நீடித்துள்ளது. அசோக்குமார் வேலைக்கு சென்றவுடன் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இவர்களது கள்ளக்காதலுக்கு அசோக்குமார் இடையூறாக இருந்து வந்துள்ளார். எனவே அசோக்குமாரை தூக்கமாத்திரை கொடுத்து கொலை செய்ய முடிவு செய்தனர்.

கடந்த 26.11.2009 அன்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அசோக்குமாருக்கு அவர்களது திட்டப்படி ஹோர்லிக்ஸ்சில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை ரேகாசுவீட்டி கலந்து கொடுத்துள்ளார். இதனை குடித்தவுடன் அசோக்குமார் மயங்கி விழுந்தார்.

அதிகாலையில் தனது கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்களுக்கு ரேகாசுவீட்டி போன் செய்தார். அதைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு வந்த சையத் ஆசீம், அசோக்குமார் இறந்துவிட்டாரா? என்பதை உறுதி செய்ய அவரது நாடித்துடிப்பை பிடித்து பார்த்தபோது அவருக்கு உயிர் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அருகில் இருந்த கயிறை எடுத்து அசோக்குமாரின் கழுத்தை அவர்கள் இறுக்கி கொலை செய்தனர்.

கொலை செய்யப்பட்ட அசோக்குமாரின் உடலை 4 பேரும் காரில் எடுத்து சென்று ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள கங்காதரநல்லூர் காட்டுப்பகுதியில் வீசி உள்ளனர்.

இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவரை கொலை செய்த வழக்கில் ரேகாசுவீட்டி, சையத்ஆசிம், வினோத், ஜூனைத்பாஷா ஆகிய 4 பேரை ஆவடி பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3-ல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

அசோக்குமார் கொலை வழக்கில் ரேகாசுவீட்டி, சையத்ஆசிம், வினோத், ஜூனைத்பாஷா ஆகிய 4 பேர் மீதும் கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி மகாலட்சுமி தீர்ப்பு அளித்தார்