கர்ப்ப காலம் என்பது பெண்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். அந்த சமயங்களில் அவர்களுடைய அஜாக்கிரதை குழந்தையையும் சேர்த்தே பாதிக்கும்.
உண்ணும் உணவு, உடல் எடை பராமரிப்பு, போதிய உறக்கம் என அத்தனையும் மிக முக்கியம்.
ஆனால் பெரும்பாலான பெண்கள் தங்களுடைய கர்ப்ப காலத்தில் சரியாக உணவு எடுத்துக் கொள்வதில்லை. சரியாகத் தூங்குவதில்லை. அதனால் உடல் எடையும் கூடுவது, குறைவது என்ற நிலையில் இருக்கிறது.
சராசரியாக இருக்க வேண்டிய உடல் எடையைவிட, பெரும்பாலான பெண்கள் உடல் எடை குறைவாகவே இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வு உலகம் முழுவதிலும் கிட்டதட்ட 1.3 மில்லியன் கர்ப்பிணிகளைக் கொண்டு முதல்கட்ட ஆய்வைத் தொடர்ந்தது.
இந்த ஆய்வில் 38 சதவீதம் பேர் சராசரியாக இருக்க வேண்டிய எடையைவிட அதிகமாகவும் 55 சதவீதம் பேர் சராசரி எடையுடனும் 7 சதவீதம் பேர் சராசரி எடையைவிடக் குறைவாகவும் இருக்கிறார்கள்.
அதாவது 50 சதவீதம் பேர் சராசரி எடையோடு இல்லை என்பதையே இந்த ஆய்வு முடிவு வெளிக்காட்டுகிறது.
கர்ப்ப காலத்தில் உடல்எடை மிக வேகமாக அதிகரிக்க ஆரம்பிக்கும். ஒரே சமயத்தில் உடல்எடை கூடுவது கூடாது. முதல் மூன்று மாதத்தில் கொஞ்சம் அதிகமாகவும் அதற்கடுத்த மூன்று மூன்று மாதங்களில் சிறிது எடை கூடினாலே போதுமானது. இந்த சமன்நிலையை கவனித்துக் கொள்வது அவசியம்.
கர்ப்பணி நன்றாக சாப்பிட வேண்டும் என்பார்கள். அது நீங்கள் தினமும் சாப்பிடும் கலோரி அளவில் சிறிது கூடுதலாக எடுத்துக் கொள்ளலாமே தவிர, அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிடவும் கூடாது.
அதனால் கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களுடைய ஆரோக்கியத்திலும் உடல் எடையிலும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.