Home பாலியல் கர்ப்பிணி உடலுறவு கொள்ளலாமா?

கர்ப்பிணி உடலுறவு கொள்ளலாமா?

66

pragnant-sex-positionsகர்ப்பம் என்பது ஒரு சுகமான தூய்மையான அனுபவம். இந்தக் கர்ப்ப காலத்தில் பெண்களிலே பல உளவியல் மற்றும் உடலியல் மாற்றங்களை ஏற்படுகின்றன.
முதல் கர்ப்பம் என்றால் இந்த திடீர் மாற்றங்கள் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என்பது யதார்த்தம், அந்த சந்தேகங்கலிலே ஒன்றுதான், கர்ப்ப காலத்திலேயே உடலுறவு கொள்ளலாமா வேண்டாமா என்பது.

மருத்துவ ரீதியாக கர்ப்ப காலத்தின் போது நடைபெறுகிற உடலுறவுகளால் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டு விடாது என்றே சொல்லப்படுகிறது. குழந்தையானது கர்ப்பப் பையினுள்ளே அம்னிஒட்டிக்(amniotic fluid) எனப்படும் திரவத்தால் சூழப்பட்டே இருக்கிறது.குழந்தையை சூழ உள்ள இந்த திரவமானது குழந்தைக்கு உடலுறவின் போது ஏற்படும் அமுக்க அசைவுகளில் இருந்து போதிய பாதுகாப்பைக் கொடுக்கிறது.

கர்ப்ப காலத்தில் அநேகமான பெண்களுக்கு உடலுறவு மீதான ஆர்வம் அதிகரிக்கிறது என்றே நிரூபிக்கப் பட்டிருக்கிறது. இவ்வாறான பெண்கள் எந்த அச்சமும் இல்லாமல் கர்ப்ப காலம் முழுவதும் உடலுறவு கொள்ளலாம்.

எப்படிப் பட்டவர்கள் கர்ப்பத்தின் போது உடலுறவைத் தவிக்க வேண்டும்?

கர்ப்ப காலத்தில் உங்களுக்கு பிறப்பு வழியில் ரத்தப் போக்கு இருந்தால் , அல்லது உடலுறவின் போது ரத்தம் போகுமானால் உடலுறவைத்தவீர்த்து வைத்திய ஆலோசனை பெறுவது நல்லது.
இவ்வாறானவர்களுக்கு பிளசென்டா பிரீவியா(placenta previa) என்கின்ற நோய் நோய் இருக்கலாம் , அதாவது நச்சுக் கொடியானது வழமையாக இருக்கின்ற கர்ப்பப் பையின் மேல் பகுதியில் இல்லாமல் அடிப்பகுதியில் இருக்கலாம் , இது உடலுறவின் போது காயப்படுத்தப் படலாம். ஆகவே கர்ப்ப காலத்தில் இரத்தம் போகிறவர்கள் உடனடியாக உடலுறவைத்தவீர்த்து , வைத்தியரை நாடி தனக்கு அந்த நோய் இல்லை என்பதை உறுதி செய்த பின்பு உடலுறவு கொள்ளலாம்.

மேலும் கர்ப்ப காலத்தில் பால் சுரப்புத் தொடங்கி விடுவதால் , பாலால் நிரம்பிய மார்பகங்கள் சில பெண்களுக்கு வலியைக் கொடுக்கலாம். மற்றும் உடலுறவின் போது ஏற்படுகின்ற தீண்டல்களால் பால் சுரப்பு ஏற்படலாம் ஆனாலும் இது எந்த விதத்திலும் தீங்கு விளைவிப்பதில்லை.

மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடற் பருமன் மாற்றத்தால் வழமையான நிலைகளில் இருந்து சற்று வேறுபட்ட நிலைகளில் உடலுறவு கொள்ள வேண்டிய தேவையும் ஏற்படலாம். அதெல்லாம் தம்பதியினரின் தனிப்பட்ட விடயம் நீங்களே பார்த்துக்கொள்ளுங்ககள்.
சுகமான கர்ப்பத்தில் சுகமான உடலுறவு சுகமானதே.