மூன்றாம் பிரிவு ஏழாவது மாதம் (27,28,29,30-வது வாரம்) :
ஏழாவது மாத நிறைவில் குழந்தையின் உடலில் கொழுப்புச் சேர ஆரம்பிக்கும். உத்தேசமாக குழந்தை 32-36 சென்டி மீட்டர் உயரமும், 900-1500 கிராம் எடையும் இருக்கும். குழந்தைக்கு காது நன்றாக கேட்கும்.
7-ம் மாதம், 27-வது வாரம் :
குழந்தை மூச்சை உள்ளிழுத்து வெளிவிட பழகும். எடை கூடும். தாய்க்கு கால் பிடிப்பு, முதுகு வலி, மலச்சிக்கல் போன்ற இயற்கையான சில பிரச்சனைகள் இருக்கலாம். தாய், குழந்தைக்கு பால் கொடுக்கும் முறையினை படித்துப் பழக வேண்டும். பிரசவ கால உடற்பயிற்சியினை முறைப்படி அறிந்துச் செய்யவேண்டும்.
7-ம் மாதம், 28-வது வாரம்: :
குழந்தைக்கு கொழுப்புச் சத்து கூடும். சுருங்கிய சருமம் வழவழுப்பாகும். சுமார் 1 கிலோ எடையை அடையும். தாய்க்கு படுப்பதில் சற்று சிரமம் இருக்கும்.
7-ம் மாதம், 29-வது வாரம்: :
குழந்தை கருப்பையின் உள்ளே சுற்றுப்பயணம் செல்லும். குழந்தை சிறுநீர் கழிக்கும். தாய்க்கு வயிற்றில் சற்று அரிப்பு இருக்கலாம். வயிறு விரிவடைவதால் கோடுகள் விழலாம்.
7-ம் மாதம், 30-வது வாரம்: :
13 முதல் 15 இன்ச் வளர்ச்சி அடையலாம். இது அவரவர் மரபணுவைப் பொறுத்தே அமையும். எடை சுமார் 1.3 கிலோ இருக்கும். குழந்தைக்கு தன் விரலால் பிடிக்கக்கூடிய சக்தி இருக்கும். தாய் தூங்கும்போது குழந்தை விழித்து தாயை தூங்க விடாது செய்யும்.
8-வது மாதம் : (வாரம் 31 – 35 வாரம்) 8-ம் மாதம், 31-வது வாரம்: :
குழந்தையின் நீளமும், எடையும் கூடும். மூளையின் நரம்பு மண்டலமும் நன்கு வளரும். கண் வெளிச்சத்தைப் பார்க்க முடியும். ஐம்புலன்களும் முறையாய் வேலை செய்யும். குழந்தை சுமார் 1.5 கிலோ எடை இருக்கும். தாய்க்கு சிறு சிறு சங்கடங்கள் இருக்கும். இது இயற்கையானதே. தாய் நன்கு தண்ணீர் குடிக்க வேண்டும். மறக்கக்கூடாது.
8-ம் மாதம், 32-வது வாரம்: :
குழந்தை கீழே இறங்க தயாராகும். நன்கு வளர்வதால், குழந்தைக்கு கர்ப்ப பையில் இடப்பற்றாகுறை இருக்கும். குழந்தை சுமார் 1.7 கிலோ எடை இருக்கும். தாய் உட்கார, எழுந்திருக்க சற்று சிரமப்படுவார்.
8-ம் மாதம், 33-வது வாரம்: :
குழந்தை விழித்துக் கொண்டிருக்கும்போது கண் திறந்திருக்கும். மூச்சு விட, விழுங்க தெரியும். எலும்பு உறுதிப்படும். மூளை வளர்ச்சி கூடும். குழந்தையின் உடல் உறுப்புகளை கை, கால் போன்றவற்றினை தாயால் உணர முடியும். தாய்க்கு தலைவலி இருக்கலாம். மூச்சு முட்டுவது போல் இருக்கலாம். சற்று இயலாமைப் போல் இருக்கலாம்.
8-ம் மாதம், 34-வது வாரம்: :
தாய் பாடினாலோ அல்லது நல்ல பாட்டினை குழந்தை நன்கு கேட்கும். சிறுநீர் நன்கு கழிக்கும். குழந்தை சுமார் 2 கிலோ சற்று கூடுதலாகவும் இருக்கும். தாய்க்கு மலச்சிக்கல் இருக்கலாம். அடிக்கடி சிறுநீர் போக தோன்றலாம்.
8-ம் மாதம், 35-வது வாரம்: :
ஒரு தேங்காய் அளவில் குழந்தை இருக்கும். வெளிச்சத்தத்தினை நன்கு கேட்கும். தாய்க்கு கூடுதல் மருத்துவ பரிசோதனை தேவைப்படும்.
9-ம் மாதம் (வாரம் 36 – 40 வாரம்) 9-ம் மாதம் :
நுரையீரல் வளர்ச்சி ஒன்பது மாத முடிவி லேயே முழுமைப் பெறுகின்றது. அதனால்தான் குழந்தை இதற்கு முன்பு பிறந்தால், அதிக கவனிப்பு தேவைப்படுகிறது. குழந்தை நன்கு கண் சிமிட்டும். தலையை நன்கு திருப்பும். ஒளி, ஒலி, தொடு உணர்ச்சிகளை நன்கு அறிந்துக் கொள்ளும். பிறப்புறுப்பின் வாயிலை நோக்கி வெளிப்படுவதற்கு தயாராகும்.
இந்தக் கால முடிவில், குழந்தையின் எடை சுமார் 2.75 முதல் 3.2 கிலோ வரை இருக்கும். இது ஒவ்வொருவருக்கும் சற்று மாறுபடும். நீளம் சுமார் 44-53 சென்டி மீட்டர் வரை இருக்கும். தாய்க்கு மார்பகத்தில் திரவம் வடியும். இந்த மாத முடிவில் தாய்க்கு
* பின் முதுகு வலி இருக்கலாம்.
* ரத்தக்கசிவு இருக்கலாம்.
* குழந்தையைப் பார்க்க ஆசை அதிகரிக்கலாம்.
* குழந்தை எடை கூடலாம்.
9-ம் மாதம், 36-வது வாரம்: :
குழந்தைக்கு சரும மென்மை கூடும். ஈறு வலிமை பெறும். குழந்தையின் கல்லீரல், சிறுநீரகம் நன்கு வேலைச் செய்யும். நோய் எதிர்ப்புசக்தி கூடும். ஒரு சில தாய்க்கு காலில் லேசான வீக்கம் தோன்றலாம்.
9-ம் மாதம், 37-வது வாரம்: :
குழந்தையின் திறமைகள் நன்கு வளர்ந்திருக்கும். குழந்தை உள் மூச்சு, வெளி மூச்சு பயிற்சியினை கூட்டிக் கொள்ளும். (இங்கு திரவமே உள் சென்று வெளி வரும்) தாய்க்கு வயிற்றில் வரிகள் கூடும். தாய் காப்பியின் அளவைக் குறைந்துக் கொள்வது நல்லது.
9-ம் மாதம், 38-வது வாரம்: :
குழந்தை ஒரு சிறிய பரங்கிக்காய் அளவு இருக்கும். குழந்தையின் உடலிலிருந்து பிசுபிசுப்பு உதிரும். எடை நன்கு கூடும். தாய்க்கு பிசுபிசுப்பான வெளிப்போக்கு இருக்கலாம். மிக லேசான ரத்தக்கசிவு இருக்கலாம். வயிற்றுப்போக்கு போல் இருக்கலாம். இவை எல்லாமே குழந்தை பிறக்கப் போவதற்கான முன்அறிகுறிகள்.
9-ம் மாதம், 39-வது வாரம்: :
குழந்தை எடை கூடும். கை, கால்களை நன்கு மடக்கும். நகங்கள் நன்கு வளர்ந்திருக்கும். 30% குழந்தைகளுக்கு வயிற்றிலேயே கழிவு வெளியாகி இருக்கும். தாய் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். இனி பிரசவ நேரம்தான். சிரிப்பான சினிமா பாருங்கள். பிறகு நேரம் கிடைக்காது.
9-ம் மாதம், 40-வது வாரம்: :
குழந்தையின் நுரையீரல் வளர்ச்சி நன்கு இருக்கும். தாய்க்கு ஓய்வு தேவை. அழகான குழந்தை உங்கள் கையில்… கீழ் முதுகுவலி, வயிற்றில் பிடிப்பு, ரத்தக்கசிவு, தடித்து சளிப்போன்று வெளி யாகுதல், தடதடவென கொட்டினால் போன்ற நீர்ப்போக்கு இவை அனைத்தும் பிரசவத்தின் அறிகுறிகள்.
சிலருக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு சற்று முன்பாகவோ அல்லது பின்பாகவோ பிரசவம் நேரலாம். மருத்துவர் தாய், சேய் உடல்நலப்படி முடிவு செய்வார். நீரிழிவு நோயாளிகள், சில கடும் பாதிப்பு உடையவர்கள் இவர்களுக்கு கூடுதல் மருத்துவ கவனம் தேவைப்படும்.
நல்ல குழந்தையைப் பெற வேண்டும் என்பதால், குழந்தையின் வளர்ச்சியினை கண்காணித்துக் கொள்வது நல்லதே. தடுப்பு மருந்துகளை அவரவர் உடல்நிலைக்கேற்ப மருத்துவர் முடிவு செய்வார்.