Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன?

கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன?

43

images (3)கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். அப்போது நான் இந்த வயதுகளில் இல்லை என்றால் எனக்கு குழந்தை பிறக்காதா? அப்படி இல்லை.
இந்த வயதுக்கு அப்புறம், உங்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க, நீங்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும். சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம்.

30 வயதில், 75% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 91% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.
35 வயதில், 66% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 84% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.
40 வயதில், 44% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 64% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.
மேலே கூறியவை பெண்கள் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு பற்றியது தானே தவிர, குழந்தைகள் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக பிறக்கும் என்பது பற்றி சொல்ல முடியாது