Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பமாவதற்கு முன்னால் கணவன் மனைவி இருவரும் முதலில் இந்த விஷயத்தை செய்யுங்கள்!

கர்ப்பமாவதற்கு முன்னால் கணவன் மனைவி இருவரும் முதலில் இந்த விஷயத்தை செய்யுங்கள்!

30

குழந்தைகள் உண்மையிலேயே நமது வாழ்க்கைக்கு கிடைத்த வரங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது…! அந்த சின்னஞ்சிறு குழந்தை வளர்வதை கண்டு உங்களது மனம் மகிழ்ச்சியடைவதை வேறு எந்த ஒரு விசியமும் கொடுத்துவிட முடியாது. கருவில் இருக்கும் அந்த சின்னஞ்சிறு குழந்தையின் இதயத்துடிப்பை உங்களது காதுகளில் ஒருமுறை கேட்டாலே போதும், உங்களது வாழ்க்கையில் இந்த ஓசையை மறக்கவே முடியாது. எப்போது நினைத்தாலும் அந்த இதயத்தின் ஓசை உங்களுக்கு ஆனந்தத்தையே அள்ளித்தரும். அந்த குழந்தைகள் வளரும் வரை அனைத்திற்கும் உங்களையே சார்ந்திருக்கும்…! அந்த குழந்தைக்கு எது தேவை எது தேவையில்லை என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டியது பெற்றோர்களான உங்களது கடமை தான்..! ஒவ்வொரு பெற்றோரும் ஒரு குழந்தைக்கு தாய், தந்தை ஆனவுடன் அதிக பொருப்பு உணர்வை பெறுகின்றார்கள்… குழந்தை உங்களது வாழ்க்கையில் மிக மிக சந்தோஷமான விஷயம் தான் என்றாலும், கருவுறுவதற்கு முன்னால் கணவன் மனைவி இருவரும் ஒரு சில விஷயங்களை பற்றி பேசி முடிவெடுக்க வேண்டியது அவசியமாகும். அதுபற்றி இந்த பகுதியில் காணலாம்.

1. எத்தனை குழந்தைகள்? முதலில் நீங்கள் உங்களது கணவரிடம் பேசி முடிவெடுக்க வேண்டியது எத்தனை குழந்தைகளை நாம் பெற்றுக்கொள்ளலாம் என்பதை பற்றி தான்… ஒருவர் ஒரு குழந்தை மட்டும் போது என்று கூறினாலோ, அல்லது மற்றொருவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் வேண்டும் என்று கூறினாலோ, இரண்டு பக்கமும் உள்ள நிறை மற்றும் குறைகளை பேசி இறுதியில் இருவரது சம்மத்தத்துடன் ஒரு முடிவுக்கு வர வேண்டியது அவசியமாகும்.

2. இது போதுமா? நீங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பினால், நீங்கள் பொருளாதார ரீதியாக இரண்டு குழந்தைகளுக்கு இருந்தால் உங்களால் சமாளிக்க முடியுமா என்பது பற்றி நீங்கள் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள்…! உங்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்திக் கொள்ள எதிர்க்கால திட்டங்கள் ஏதேனும் உள்ளதா என்பதையும் பேசி தெரிந்து கொள்ளுங்கள்.

3. பொறுப்புகளை பகிர்தல் குழந்தை பிறந்த பின்னர் உங்களது வாழ்க்கையில் பல விஷயங்கள் மாறுபடும். குழந்தை வந்த பின்னர் பல பொருப்புகள் உங்களுக்கு வரும். ஒரு குழந்தையை பெற்று வளர்ப்பது என்பது மிக சாதாரணமான விஷயம் இல்லை… நீங்களும் உங்களது கணவரும் அமர்ந்து, குழந்தைக்கு டயப்பர் மாற்றுவது யார் என்பது முதல் குழந்தையை யார் பள்ளிக்கு அழைத்து செல்வது என்பது வரை பேசுங்கள்… உங்கள் இருவருக்கும் சம அளவு பொருப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டியது என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். ஒருவருக்கு அதிகமாகவும் ஒருவருக்கு குறைவாகவும் இருப்பது வேண்டாம்…

4. யார் பார்த்துக்கொள்வது? குழந்தையை நிச்சயமாக ஒருவரே பார்த்துக் கொள்ள முடியாது. ஏதேனும் பெரியவர்களின் உதவி கண்டிப்பாக தேவைப்படும். எனவே நீங்கள் யாருடைய உதவியை நாடப்போகிறீர்கள் என்பது குறித்து முடிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. அப்படி யாருடைய உதவியையும் நாடப்போவதில்லை என்றால் மாற்றுவழி என்பது குறித்தும் முடிவு செய்து கொள்ளுங்கள்.

5. வேலை வேலைக்கு செல்லும் பெண்கள் எத்தனை மாதங்கள் விடுப்பு எடுக்க போகிறீர்கள்.. அல்லது வேலையைவிட்டுவிட்டு குழந்தையை பார்த்துக் கொள்ளப்போகிறீர்களா என்பதை கணவன் மனைவி இருவரும் பேசி முடிவு செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். மேலும் மனைவி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டால் வரும் நிதி பிரச்சனைகள் என்னென்ன? அதை சரி செய்வது என்பதை பற்றி எல்லாம் யோசித்து தீர்வு காணுங்கள்..

6. கருத்து ஒற்றுமை குழந்தைக்காக செய்ய வேண்டிய ஒவ்வொரு விஷயத்திலும் கணவன் மனைவி இருவருக்குள்ளும் கருத்து ஒற்றுமை இருக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு இருவரும் தங்களது மனதில் உள்ள விஷயங்களை மனம் விட்டு பேசி முடிவு காண்பது முக்கியமாகும்.. உங்களால் ஒரு சரியான முடிவுக்கு வரவில்லை என்றால், ஒரு சரியான நபரிடம் என்ன செய்யலாம் என்பது குறித்து பேசி முடிவு எடுப்பதில் எந்த தவறும் இல்லை…!

7. பெயர் வைத்தல் குழந்தைக்கு பெயர் வைத்தல் என்பது பல குடும்பங்களை பிரச்சனையில் கொண்டு சென்றுள்ளது.. கணவன் குடும்பத்தினரின் பெயரை வைக்க வேண்டும் என்றும், என் குடும்பத்தினரின் பெயரை தான் வைக்க வேண்டும் என்று மனைவியும் கூறினால் அங்கு தான் பிரச்சனை ஆரம்பமாகும்.. இருவரும் இது குறித்து தெளிவாக பேசி ஒருமனதுடன் ஒரு முடிவுக்கு வந்துவிடுவதும் அதன் பின் மாறாமல் இருப்பதும் பிரச்சனை இல்லாத வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

8. காது குத்துதல் குழந்தை பிறந்ததும் நடக்கும் மிகப்பெரிய சடங்கு இது தான்.. சிலர் சின்ன வயதிலேயே குழந்தைக்கு காது குத்தினால், குழந்தை அந்த வலியை எப்படி தாங்கும் என்றும், சிலர் குழந்தைக்கு சின்ன வயதிலேயே காதை குத்திவிட்டால் இந்த வலி பெரிதாக தெரியாது என்றும் தங்களது கருத்துக்களை கொண்டிருப்பார்கள்.. எனவே நீங்கள் இருபுறமும் உள்ள நிறை மற்றும் குறைகளை கணக்கிட்டு அதன்படி ஒரு முடிவுக்கு வாருங்கள். இல்லை என்றால் சரியான ஒரு நபரின் அறிவுறையை பெறுவதில் தவறில்லை..!