புதுமண தம்பதிகள் பொதுவாக தனது துணையுடன் வாழ்க்கையை சிறிது நாள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காக, சிலவருடம் குழந்தை பெறுவதை தள்ளிப்போடலாம் என்ற கருத்தை கொண்டிருப்பார்கள் . இந்த மனோபாவத்தை கொஞ்சம் மறுபரிசீலனை செய்யலாம். ஏன் எதற்கு இந்த இலவச அறிவுரை என்கிறீர்களா? நீங்கள் விரும்பும் நேரத்தில் கரு தங்கும் என சொல்லமுடியாது. திருமணமான புதிதில் கரு தங்க கூடிய சூழல் நிலவி, தம்பதிகளின் விருப்பத்திற்காக தள்ளிப்போட்டு, பின்னர் கோவில்,ஆஸ்பத்திரி என அலைபவர்கள் தான் அதிகம். இதில் சொந்தக்காரர், பார்ப்பவர் என எல்லோருக்கும் பதில் சொல்லிமாளாது.
முதல் குழந்தை பிறந்து விட்டது, அடுத்த குழந்தை சிலவருடங்களுக்கு பிறகு பெற்றுக்கொள்ளலாம் என்று இருந்தால் பெண்களுக்கு copper T வைக்கலாம்.முதல் குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வரும் போதோ அல்லது சில மாதங்களுக்கு பிறகோ பெண்கள் இதனை பயன்படுத்தலாம். அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த வசதி உண்டு.
மருத்துவரிடம் கருத்தரிக்கும் காலத்தை தெளிவாக கேட்டு தெரிந்துகொள்வது அவசியம். பொதுவாக மாதவிடாய் முடிந்த ஒருவார காலத்தில், உடலுறவு வைப்பதை தவிர்க்கும் போது குழந்தை உண்டாவதும் தள்ளிப்போகலாம். முதல் கருவை கலைக்கும் வேலையை மட்டும் செய்துவிட்டால், பின்னர் கரு உருவாவதும் குழந்தை பிறப்பு என்பதும் சிரமமாகிவிடும் என்பது அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்து.