சமீபகாலமாக பெண்களுக்கு பெரும் தொல்லை எது தெரியுமா? கருப்பையில் வளரும் நார்த்திசுக் கட்டிகள் (ஃபைப்ராய்ட்ஸ்) தான். சிறிதும், பெரிதுமாக இருக்கும் இந்தக் கட்டிகள் கேன்சராக மாறாது என்பது ஒன்றே பெரிய ஆறுதல்.
“உண்மை. ஆனால் கருப்பையில் உள்ளே, வெளியே… என உருவாகும் இந்தக் கட்டிகளால் மாதவிலக்கின் போது அதீத வலி வரும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம், ரத்தப்போக்கு… என ஆபத்துகள் அணிவகுக்கும்…
இதற்கான லேட்டஸ்ட் சிகிச்சை என்ன?
சிலமணி நேரங்களில் செய்யக் கூடிய ஆபரேஷன்கள் இருக்கு. “மேக்னட்டிக் ரெஸோனன்ஸ் கைடட் ஃபோகஸ்டு அல்ட்ரா சவுண்ட் (எம்.ஜி.ஆர். எஃப்.யு.எஸ்) சிகிச்சையின் மூலம் “ஃபைப்ராய்டுகளை’ அழித்து விடலாம். பொதுவாக இந்த நார்த்திசுக் கட்டிகளை அகற்ற கருப்பையையே ரிமூவ் செய்து விடுவதும் உண்டு. இருந்தாலும் இந்த நவீன சிகிச்சையின் மூலம் எந்த உறுப்பும் அகற்றப்படாது. மாறாக, பாதிப்புகளை மட்டும் நீக்கி கட்டிகளுக்கு கல்தா கொடுக்கலாம்!’