Home பெண்கள் தாய்மை நலம் கருத்தரிக்க பெண்கள் கணவருடன் சேர வேண்டிய நாட்கள்

கருத்தரிக்க பெண்கள் கணவருடன் சேர வேண்டிய நாட்கள்

69

imagesஓர் பெண்ணிற்கு மாதவிடாய் என்பது மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். மாதவிடாய் முடிந்த முதல் 7 நாள் வரை புதிதான கரு உருவாகி, ஆரோக்கியமான நிலை அடையும். 8வது நாளில் இருந்து மாதவிடாய் சுழற்சியின் 19வது நாள் வரை அந்த கரு நல்ல வலிமையோடு இருக்கும். பின் மீண்டும் கரு கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து மாதவிடாய் ஏற்பட்டு இரத்தப் போக்காக வெளியேறிவிடும்….
ஒரு சிலருக்கு 28 நாட்களும், ஒரு சிலருக்கு 32 நாட்களுமாக மாதவிடாய் சுழற்சி ஏற்படும். 28 நாட்கள் மாதவிடாய் சுழற்சி ஏற்படுபவர்கள் மொத்த நாட்களில் இருந்து 18 நாட்களை கழித்து இடை நாட்களான 10 நாட்களில் உடலுறவுக் கொள்ள வேண்டும். 32 நாட்கள் உள்ளவர்கள், மொத்த நாட்களில் 11 நாட்களை கழித்து இடைப்பட்ட 21 நாட்களில் உடலுறவுக் கொள்ளாலாம்.
இந்த இடைப்பட்ட நாட்களில் கரு நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். பெரும்பாலும் மாதவிடாய் சுழற்சி 28 நாட்களாக தான் இருக்கும். இதில் இருந்து இரத்தப்போக்கு ஏற்படும் அந்த 5 நாட்களை கழித்துவிட்டால் மீதம் 23 நாட்கள் இருக்கும் இரத்தப் போக்கு முடிந்த 8 நாட்களுக்கு பின் கரு நல்ல நிலையில் இருக்கும்.
9 – 15வது நாள் வரையிலான 7 நாட்கள் கரு ஆரோக்கியமாக இருக்கும். பின் கடைசி 8 நாட்களில் கொஞ்சம், கொஞ்சமாக வலுவிழந்துவிடும். எனவே அந்த இடைப்பட்ட 7 நாட்களில் உடலுறவுக் கொண்டால் கருத்தரிக்க நிறைய வாய்புகள் இருக்கின்றன. கரு முட்டை தோன்றி வெளிவரும் நாட்கள் பெண்களின் உடல் மிகவும் வெப்பமாக இருக்கும்.
இதை, நீங்கள் உடலின் அடிப்பகுதியில் தெர்மாமீட்டர் வைத்து கணக்கிட்டு பார்க்கலாம். கரு முட்டை அதன் நிலையை அடையும் வரை இந்த சூடு இருக்கும். அது தனது நிலையை 6-8 வது நாளில் அடைந்துவிடும். அந்த நாட்களில் இருந்து நீங்கள் உடலுறவுக் கொள்ள ஆரம்பித்தால் எளிதாக கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.
உடலுறவில் ஈடுப்படும் போது, ஆண்களுக்கு விந்தணு வெளிபடுதல் போன்று, பெண்களுக்கு அவர்களது பிறப்புறுப்பில் இறந்து ஓர் திரவம் வெளிப்படும். அந்த திரவம் நீர் போன்று இல்லாது கொஞ்சம் அடர்த்தியாக வெளிவருகிறது எனில், நீங்கள் கருத்தரிக்க அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது என்று அர்த்தம். அந்த நாட்களில் ஆணுறையின்றி உடலுறவுக் கொண்டால் கருத்தரிக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.
பெண்களின் உடல் கூறில் சில அறிகுறிகள் தென்படும். வயிற்றின் ஒரு பகுதியில் மந்தமான வலி ஏற்படுதல், மார்பக பகுதியில் நிலைமாற்றம் அடைதல் அல்லது மென்மையாக உணர்தல் போன்ற அறிகுறிகள் நீங்கள் கருத்தரிக்க தயாராவதை குறிப்பிடுவன ஆகும். அந்த நாட்களில் நீங்கள் சரியான முறையில் உடலுறவுக் கொண்டால், கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.