Home பெண்கள் தாய்மை நலம் கருக்கலைப்பிற்கு பிந்தைய மாதவிடாய் காலம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

கருக்கலைப்பிற்கு பிந்தைய மாதவிடாய் காலம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

26

13-1460546376-5-pregnancyகண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்த சிசு சிதைந்துபோதல் என்பது உண்மையிலேயே பெண்களின் வாழ்வில் நடக்கக்கூடாத ஒரு சோகமான விஷயமாகும். அது அந்தப் பெண்ணின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

அவர் விரும்பும் ஒருவருடன் சேர்ந்து கருத்தரித்து, ஒரு குடும்பத்தை தொடங்க விரும்பும் எந்த ஒரு பெண்ணிற்கும் நடக்கக்கூடாத மிக கொடூரமான விஷயங்களில் ஒன்றாக கருச்சிதைவு கருதப்படுகின்றது.

கருச்சிதைவானது ஒரு விபத்தின் காரணமாக நடந்திருந்தாலும் அல்லது உங்களுடைய தவறுகள் காரணமாக நடந்திருந்தாலும், அது மோசமான விளைவுகளையே ஏற்படுத்துகின்றது.

கருச்சிதைவிற்கு உள்ளான பெண் அடுத்த முறை மற்றொரு குழந்தைக்கு திட்டமிடும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு கருச்சிதைவிற்கு பின்னர், குறிப்பாக முதல் முறைக்குப் பின்னர், அந்தப் பெண்ணிற்கு மீண்டும் ஒரு முறை கருச்சிதைவு ஏற்பட 70 சதவீத வாய்ப்புகள் உள்ளன.

நிபுணர்கள், ஒரு பெண் இந்தக் கடுமையான வலிக்கு உட்படும் போது, அது அந்தப் பெண்ணின் உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திவிடுகின்றது, எனத் தெரிவிக்கின்றனர். அவள் மனம் மற்றும் உடல் ரீதியாக பலவீனமடைகின்றாள். அவளுக்கு இதனால் உண்டாகும் மன அழுத்தம், அவளை மன நோயாளியாகக் கூட மாற்றிவிடும்.

கருச்சிதைவிற்கு பின்னர் பெண்களுக்கு வரும் முதல் மாதவிடாய் காலம் மிக மோசமான ஒன்றாகும். சுகாதார நிபுணர்கள், ஒரு கருக்கலைப்பிற்கு பிறகு வரும் மாதவிடாய் காலம் என்பது ஒரு பெண்ணிற்கு சிறிய ஆபத்தை உண்டாக்கும், எனத் தெரிவிக்கின்றார்கள்.

கருச்சிதைவு மூலம் நிறைய இரத்தப்போக்கு ஏற்படும் என்பதால், பெண்களின் கருச்சிதைவிற்கு பின்னர் வரும் முதல் மாதவிடாய் காலத்தில் வழக்கத்தை விட இன்னும் சற்று அதிகமாக இரத்தம் வரும் வாய்ப்புக்கள் உள்ளன.

பெண்கள் கருச்சிதைவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஐந்து விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. எனவே நீங்கள் தொடர்ந்து படியுங்கள்.

கருக்கலைப்பிற்கு பிறகு ஏற்படும் ஒரு கனமான மாதவிடாய் காலம்
கருக்கலைப்பிற்கு பிறகு, 2 வாரங்கள் கழித்து, உங்களுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டால், நீங்கள் ஒரு மருத்துவரை கலந்தாலோசிப்பது மிகவும் நல்லது. அவ்வாறு இல்லாமல், உங்களின் மாதவிடாய் காலத்திற்கு பிந்தைய 7 நாட்களில் உங்களுக்கு உதிரப்போக்கு ஏற்பட்டால், உங்கள் இனப்பெருக்க அமைப்புகளில், கலைந்த சிசுவின் எஞ்சிய திசுக்கள் தங்கியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.

ஒழுங்கற்ற மாதவிடாய் காலம்
உங்களின் கருக்கலைப்பிற்கு பிறகு ஒழுங்கற்ற மாதவிடாய் காலம் ஏற்பட்டால், அது ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக இருக்கலாம். அவ்வாறு ஏற்பட்டால் உங்களின் உடலானது, உங்களுடைய கருச்சிதைவிற்கு பின்னர் தேறி வருகின்றது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உங்களுடைய ஹார்மோன்கள் மீண்டும் வழக்கமான நிலைக்கு திரும்பி விட்டால், உங்களுக்கு மீண்டும் வழக்கமான மாதவிடாய் காலங்கள் தொடங்கும்.

இரண்டாம் முறை ஏற்படும் உதிரப்போக்கு
சில சூழ்நிலைகளில், ஒரு பெண்ணிற்கு ஒரு மாதத்தில் இருமுறை உதிரப்போக்கு ஏற்படலாம். இந்த பிரச்சனை ஏற்படும் போது, ‘கருப்பையில் இருந்து நஞ்சுக்கொடி வெளியேறுகின்றது எனத் தெரிந்து கொள்ளலாம்’, என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இது பொதுவாக ஆரம்பகால கருச்சிதைவை குறிக்கின்றது.

கருக்கலைப்பிற்கு பிந்தைய இயல்பான மாதவிடாய காலங்கள்
உங்களுடைய கருச்சிதைவிற்கு பிறகு ஒரு மாதம் கழித்தும், உங்களுக்கு இயல்பான மாதவிடாய் வரவில்லை எனில் கவலை வேண்டாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எல்லா பெண்களுக்கும் இது ஏற்படுகின்றது.

தசைப்பிடிப்புகள் அல்லது கருச்சிதைவு
சில சந்தர்ப்பங்களில், பல பெண்கள் பெரும்பாலும் தசைப்பிடிப்பிற்கும் கருச்சிதைவிற்கும் இடைய குழம்பிக்கொள்கின்றார்கள். உங்களுக்கு கருக்கலைந்து விட்டது என நம்பி இதுவரை உங்களுடைய கர்ப்பத்தை மருத்துவரிடம் உறுதிப்படுத்தவில்லை எனில் மிக விரைவாக ஒரு மருத்துவரிடம் சென்று ஆலோசனைப் பெறுங்கள்.