முடி உதிர்தல், செம்பட்டை நிறமாக மாறுவது, சொட்டை விழுவது, பொடுகு போன்ற எல்லாவிதமான தலைமுடிபிரச்னைக்கும் காரணம் ஊட்டச்சத்து குறைபாடு, மாசுக்கள், தூசி என்று மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. தலைக்கு எண்ணெய் தேய்ப்பதில்லை. ஆம். அதிலும் இன்றைய தலைமுறை இளசுகள் ( ஆண், பெண் இருவரும்) எண்ணெயை தலைக்குக் காட்டுவதே கிடையாது.
பிறகு எப்படி முடி கருமையாக இருக்கும். இளநரை வரத்தான் செய்யும். வந்தபின் கவலைப்படுவதை விட, வரும் முன்பு காப்பதே சிறந்தது அல்லவா?… அதனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படி, வீட்டிலேயே எண்ணெயைத் தயாரித்து தலைக்குத் தடவி வாருங்கள். மிக விரைவிலேயே செம்பட்டை முடி கூட கருகருவென மாறிவிடும்.
சொட்டை விழுவதுபோல் இருந்தால் கூட, அந்த இடங்களில் முடி முளைக்க ஆரம்பிக்கும்.
தேவையான பொருள்கள்
நெல்லிக்காய் சாறு – 50 மிலி
கற்றாழை சாறு – 50 மிலி
வெற்றிலை சாறு – 50 மிலி
சின்ன வெங்காயச் சாறு – 50 மிலி
கருவேப்பிலைச்சாறு – 50 மிலி
மருதாணிச் சாறு – 50 மிலி
மிளகு – 20 கிராம்
செய்முறை
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைத் தனித்தனியாக இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் மற்றும் மிளகு இரண்டையும் தவிர மற்ற அனைத்து சாறுகளையும் ஒன்றாகக் கலந்து, அடுப்பில் வைத்து பாதியாக வற்றவிட வேண்டும்.
பின்னர் அதில் தேங்காய் எண்ணெய்யை கலந்து கொதிக்க வைத்து, மிளகை தட்டிப்போட்டு இறக்கி, அந்த எண்ணெய்யை பதப்படுத்தி வைத்து கொண்டு தலையில் தொடர்ந்து தேய்த்து வர வேண்டும்.
இப்படி செய்து, அந்த எண்ணெயைத் தொடர்ந்து தினமும் தலையில் தேய்த்துவர, முடி உதிர்தல் நிற்கும். கண்பார்வை தெளிவாகும். தலைவலி குணமாகும். உடல்சூடு, மூக்கடைப்பு, கப வியாதிகள், இழுப்பு, இருமல் கட்டுப்படும். வழுக்கை தலையிலும் முடி வளரும். செம்பட்டை முடி கறுப்பாக மாறும்.
தலையில் எண்ணெய் தலையுடன் வெளியே வரப் பிடிக்காதவர்கள் இரவில் தலைக்கு இந்த எண்ணெயைத் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். பின்பு காலையில் சீயக்காய் அல்லது மென்மையான ஹெர்பல் ஷாம்பு கொண்டு தலையை அலசிவிடுங்கள்.