கரண்டி ஆம்லெட் விருதுநககர் மாவட்டத்தின் மற்றுமொரு சிறப்பு .நாம் சாதரணமாக ஆம்லெட் சாப்பிட்டு அலுத்து போய்இருக்கும் .அவர்களுக்கு மற்றும் ஒரு வித்தியாசமான ஆம்லெட் கரண்டி ஆம்லெட்
எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் :
எண்ணெய்யும் , உப்பும் – தேவையான அளவு.
சின்ன வெங்காயம் – கைப்பிடி
மிளகுத் தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிதளவு
முட்டை ஒன்று
நாம் எப்பொழுதும் ஆம்லெட் போடுவதை போல ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.பிறகு ஒரு சிறிய குழியான கரண்டியில் சிறிதளவு எண்ணெய் தடவி நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை லேசாக வதக்க வேண்டும். பொடி செய்யபட்ட மிளகுத்தூள் தூவி கலக்கி வைத்திருக்கும் முட்டையை ஊற்றவும்.கொஞ்ச நேரத்தில் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
சுடச்சுட கரண்டி ஆம்லெட் தயார்